தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.