விஜயகாந்தை பார்த்தால் செத்து விடுவேன் ..பொன்னம்பலத்தின் உருக்கமான பேட்டி!

First Published | Jul 27, 2022, 9:19 AM IST

சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்தவர் தனுஷ் அவரையும் எனக்கு உதவிய அனைவரையும் நான் மகான் என்று தான் சொல்வேன் என உருக்கமாக பேசியுள்ளார் பொன்னம்பலம்.

ponnambalam

 வில்லனாக நடித்து பிராப்ளமானவர் பொன்னம்பலம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிரபலம். சமீப காலமாக உடல்நிலை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள இவர் தற்போது கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையி. அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் தற்போது நலமுடன் இருக்கிறார். தனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிய சினிமா பிரமுகர்கள் குறித்து தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் பொன்னம்பலம். 

மேலும் செய்திகளுக்கு...கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விமல்!

ponnambalam

அந்த பேட்டியில் விஜகாந்த் குறித்து பேசிய நடிகர், விஜயகாந்த் எனக்கு கடவுள் போல அவரை நான் இன்னும் நேராக சென்று பார்க்கவில்லை. அவரை நேரில் பார்த்தால் செத்துவிட்டேன்.  எனக்கு கொஞ்ச நாளா இதய நோய், சிறுநீரக நோய் இருக்கு அவரைப் பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல பாசம் வச்சுட்டு அதுவும் அளவு கடந்த பாசம் வைத்து விட்டால் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும் போது பார்க்க முடியாது. அதனால் தான் நான் இதுவரை விஜயகாந்தை நேரில் பார்க்கவில்லை. அவர் இப்போ நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர்தான் எனக்கு முதல் நபராக உதவி இருப்பார் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !

முன்னணி நடிகரும் ,அரசியல் தலைவருமான விஜயகாந்த் தற்போது உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சர்க்கரை அதிகமானதால் அவரது இரண்டு கால் விரல்கள் துண்டிக்கப்பட்டதாக தேமுதிக கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் தற்போதும் உரிய சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

Tap to resize

ponnambalam

பின்னர் சரத்குமார் பற்றி பேசிய பொன்னம்பலம், பல மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்தேன். அவர்தான் என் வீட்டு வாடகையை கட்டியுள்ளார் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...”புதுசா மாடு வாங்கி இருக்கோம்”… புது கார் வாங்கியதை வித்தியாசமாக சொன்ன பாலாஜி முருகதாஸ்!!

பிரகாஷ்ராஜுக்கு ஒரு போன் தான் செய்தேன் 2 லட்சம் கொடுத்தார். சிரஞ்சீவி பெரிய மனிதர்  என் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து இரண்டு லட்சம் ரூபாயை அனுப்பியதுடன். ஆறுதல் கூறி ஆடியோ மெசேஜ் அனுப்பினார் எனக் கூறியுள்ள நடிகர் பொன்னம்பலம், தனுஷ் என் மானத்தை காப்பாற்றினார். சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்தவர் தனுஷ் அவரையும் எனக்கு உதவிய அனைவரையும்  நான் மகான் என்று தான் சொல்வேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

Latest Videos

click me!