2026 பொங்கல் பாக்ஸ் ஆஃபீஸ் பந்தயத்தில், ஜனநாயகன் விலகியது பராசக்தி படத்திற்கு வசூல் ரீதியாக சாதகமாக அமைந்தது. இருப்பினும் 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆஃபீஸில் முன்னேறி, உண்மையான வின்னராக உருவெடுத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 2026-ம் ஆண்டு பொங்கல் ரேஸ் ஆரம்பத்தில் ஒரு பெரும் போராகவே பார்க்கப்பட்டது. குறிப்பாக தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஆகிய படங்களுக்கு இடையேதான் நேரடி மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் 'ஜனநாயகன்' படத்திற்கு ஏற்பட்ட சென்சார் சிக்கல்கள் மற்றும் ரிலீஸ் தள்ளிவைப்பு, ஒட்டுமொத்த பாக்ஸ் ஆஃபிஸ் கணக்கையும் தலைகீழாக மாற்றியுள்ளது.
25
ஜனநாயகன் விலகல்: யாருக்கு லாபம்?
விஜய்யின் படம் ரிலீஸாகாதது மற்ற படங்களுக்கு மிகப்பெரிய 'ஜாக்பாட்' ஆக அமைந்தது. இதில் முதன்மையான பலனைப் பெற்றது சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'. ஜனவரி 10-ம் தேதியே வெளியான இப்படம், போட்டியின்றி களமிறங்கி முதல் இரண்டு நாட்களிலேயே 51 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்தது. தற்போது வரை இந்தியாவில் மட்டும் 41 கோடி ரூபாயை எட்டிப் பிடித்துள்ளது. சோலோ ரிலீஸ் அட்வான்டேஜ் சிவகார்த்திகேயனுக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய பலத்தைக் கொடுத்துள்ளது.
35
திடீர் திருப்பம்: தடுமாறும் வா வாத்தியார்!
ஜனநாயகன் ரேஸிலிருந்து விலகியதும், அந்த வெற்றிடத்தை நிரப்ப அவசர அவசரமாக களமிறங்கியது கார்த்தியின் 'வா வாத்தியார்'. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படம், முதல் நாளில் 1.75 கோடியும், இரண்டாம் நாளில் 3 கோடியும் என மொத்தம் 3 நாட்களில் 5.2 கோடி ரூபாயை மட்டுமே ஈட்டியுள்ளது. நலன் குமாரசாமியின் வழக்கமான பாணி இல்லாததும், இரிட்டேட் செய்யும் திரைக்கதையும் கார்த்திக்கு இந்த பொங்கலில் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த பொங்கல் வின்னர் லிஸ்டில் அசல் திருப்பத்தை ஏற்படுத்தியது நடிகர் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' (TTT) திரைப்படம் தான். ஜனவரி 15-ம் தேதி எவ்வித ஆரவாரமும் இன்றி வெளியான இப்படம், தற்போது 'டார்க் ஹார்ஸ்' போல பாக்ஸ் ஆஃபிஸில் முன்னேறி வருகிறது.முதல் நாளில் 1.50 கோடி ஈட்டிய இப்படம்,இரண்டாம் நாளில் 2.50 கோடி என வசூலை அதிகரித்துள்ளது. வெறும் 2 நாட்களில் 4 கோடி ரூபாயை நெருங்கியுள்ள இப்படம், இன்று மாலைக்குள் கார்த்தியின் பட வசூலை முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
ரேஸில் முந்துவது யார்?
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எண்ணிக்கையில் 'பராசக்தி' முன்னிலையில் இருந்தாலும், ரசிகர்களின் 'பாசிட்டிவ் டாக்' மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' மாறியுள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் ஜீவா படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், விஜய் படம் வராததால் சிவகார்த்திகேயனுக்கு வசூல் ஜாக்பாட் அடித்திருந்தாலும், விமர்சன ரீதியாக அந்த ஜாக்பாட்டை தட்டிப் பறித்திருக்கிறார் ஜீவா. 2026 பொங்கலின் உண்மையான 'சைலண்ட் வின்னர்' யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவாகிவிடும்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.