3 லட்சம் வாடகை பாக்கி; வீட்டை லாட்ஜாக மாற்றி விட்டதாக கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்!

Published : Jan 25, 2025, 01:24 PM ISTUpdated : Jan 25, 2025, 03:54 PM IST

நடிகர் கஞ்சா கருப்பு, வீட்டின் வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வருவது மட்டும் இன்றி வீட்டை லாட்ஜாக மாற்றிவிட்டார் என வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  

PREV
15
3 லட்சம் வாடகை பாக்கி; வீட்டை லாட்ஜாக மாற்றி விட்டதாக கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்!
Ganja Karuppu

தமிழில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் கஞ்சா கருப்பு. மதுரையில் இருந்து வந்து, ரொம்ப கஷ்டப்பட்டு பல எடுபிடி வேலைகள் செஞ்சி நடிப்புல முன்னேறுனவர் தான் கஞ்சா கருப்பு. இவர் கஷ்டப்பட்ட நேரத்துல, தன்னோடைய அலுவலகத்தில் வேலையும் கொடுத்து, தங்க இடமும் கொடுத்தவர் அமீர். எனவே தான் அமீர் தன்னுடைய குருநாதர் என்றும், எப்போமே அவர் முன்னாடி நான் கைகட்டி தான் பேசுவேன் கஞ்சா கருப்பு சமீபத்தில் கூட தெரிவித்திருந்தார். 

25
Ganja Karuppu Movies

அதே போல் கஞ்சா கருப்புவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் பாலா தான். கஞ்சா கருப்பு பாலா இயக்கத்தில் நடித்த பிதாமகன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தடுத்து ராம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, சிவப்பதிகாரம், பருத்தி வீரன் என வரிசையாக பல படங்களில் நடித்தார். 

60 ரூபாயுடன் விவாகரத்து பெற்று வெளியேறிய சரிகா! செட்டில்மென்ட் கொடுக்காதது ஏன்? கமல் சொன்ன காரணம்!

35
Ganja Karuppu Participate Bigg Boss

இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கஞ்சா கருப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஒரு சர்ச்சையான போட்டியாளராக பார்க்கப்பட்டார். குறிப்பாக பரணியை இவர் சிலிண்டரை தூக்கி அடிக்க போன சம்பவங்க பரபரப்பில் உச்சம் எனலாம். இவர் செய்த அலப்பறை தாங்க முடியாமல், முடிந்தவரை சீக்கிரமாகவே இவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள் மக்கள்.

45
police Complaint Against Ganja Karuppu

தற்போது இவரின் கைவசம் சில படங்கள் உள்ள நிலையில், சென்னையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் இப்போது கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறி இருபதாவது, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில், ரமேஷ் என்கிற எனக்கு சொந்த வீடு உள்ளது. 

2 முறை நடந்த அவமானம்; கர்நாடகா மாநில விருதை கிச்சா சுதீப் புறக்கணிக்க இது தான் காரணமா?

55
Shocking Police Complaint

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், கஞ்சா கருப்பு என்னுடைய வீட்டில் வசித்து வருகிறார். சென்னையில் சூட்டிங் நடக்கும் போது, இந்த வீட்டில் வந்து தங்குவேன் என சொல்லி தான் வாடகைக்கு வந்தார். பல மாதங்களாக அவர் வீட்டுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்தி விட்டார். இதுவரை 3 லட்சம் வாடகை பணம் அவர் கொடுக்க வேண்டி உள்ளது. தன்னுடைய வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் வீட்டில் நடக்கின்றன. ஒரு லாட்ஜ் போல் தன்னுடைய வீட்டை கஞ்சா கருப்பு மாற்றி விட்டதாக, வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து மதுரவாயல் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

click me!

Recommended Stories