
உலக நாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி தான் சரிகா. நடிகையாக அறியப்படும் இவர் தனது ஏழு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தன்னுடைய கேரியரை துவங்கினார். அவரது முதல் படம் ஹம்ராஜ். இயக்குனர் பி.ஆர். சோப்ரா இயக்கிய இந்த படம் 1967 இல் வெளியானது. ஆஷிர்வத், சத்ரகம், பாலக் ஔர் பேட்டி போன்ற படங்களில் நடித்த பிறகு, 1975 இல் காகஸ் கி நாவ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சாரிகா தனது தனிப்பட்ட மற்றும் சினிமா கேரியரில் அடுத்தடுத்த உயரங்களை எட்டினார்.
இதன் பின்னர் தமிழ் திரையுலகில் உலக நாயகன் பட்டத்திற்கு சொந்தமான கமல்ஹாசனுடன், சரிகாவுக்கு ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. ஏற்கனவே பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்ட நிலையில், வாணியுடன் விவாகரத்து பெற்ற அதே ஆண்டு சரிகாவை திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன். சரிகாவை, கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்ட போது... அவர் 4 மாதம் கர்பமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
2 முறை நடந்த அவமானம்; கர்நாடகா மாநில விருதை கிச்சா சுதீப் புறக்கணிக்க இது தான் காரணமா?
2000த்தில், கமல்ஹாசன் கொடுத்த பேட்டி ஒன்றில், தான் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் சாரிகாவுடனான தனது உறவை பல முறை முடிவுக்கு கொண்டுவர முயன்றதாக ஒப்புக்கொண்டார். ஆனால் விதி வேறு விதமாக எழுதப்பட்டது. சாரிகா திருமணமாகாமல் கமலின் குழந்தையை சுமந்தார். கமல்ஹாசன் தனது முதல் மனைவி வாணி கணபதிக்கு விவாகரத்து கொடுத்தார். பின்னர் சாரிகாவை மணந்தார். 1991 இல் அவர்களின் இரண்டாவது மகள் அக்ஷரா பிறந்தார். ஆனாலும் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவரும் 2002 இல் விவாகரத்து கோரி மனு தாக்கம் செய்தனர்.
இதற்கு முன்பு சாரிகா தற்கொலைக்கு முயன்றகாக கூறப்பட்டது. கௌதமியுடன் கமல்ஹாசன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததும், சாரிகா கோபத்தில் தனது வீட்டின் பால்கனியில் இருந்து குதித்தார். பலத்த காயமடைந்து 3 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன் பிறகு, சாரிகா கமல்ஹாசனிடம் இருந்து விலகிச் சென்றார். இருவரும் 2004 இல் பிரிந்தனர்.
'குடும்பஸ்தனாக' ரசிகர்கள் மனதை கவர்ந்தாரா மணிகண்டன்? முதன் நாள் வசூல் விவரம் இதோ!
விவாகரத்திற்கு பிறகு சாரிகா தனது வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டியிருந்தது. சிமி கரேவாலுடனான ஒரு பழைய பேட்டியில் சாரிகா கூறும்போது, விவாகரத்திற்குப் பிறகு கமலிடமிருந்து பிரிந்து சென்றபோது அவரிடம் வெறும் 60 ரூபாய் மற்றும் ஒரு பழைய கார் மட்டுமே இருந்தது. "நான் எனக்கும் என் அம்மாவுக்கும் நல்லது என்று தோன்றியதைச் செய்தேன். அதைச் செய்ய வேண்டியிருந்தது. இது மிகுந்த வேதனைக்குப் பிறகு எடுத்த முடிவு. ஒரே இரவில் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது. நான் 60 ரூபாயுடன் என் காரையும் எடுத்துக்கொண்டு சென்றேன்” என்று அவர் கூறினார்.
இது குறித்த கேள்வியை சிமி கரேவால் மற்றொரு பேட்டியில் கமல்ஹாசனிடம் கேட்டார். உங்கள் முன்னாள் மனைவி சாரிகாவுக்கு ஏன் நிதி உதவி செய்யவில்லை என்று கமலிடம் கேட்டார். “நான் அவருடன் இருந்தபோது கவனித்தேன் - அவருக்கு அனுதாபம் பிடிக்காது. அவருக்கு அந்த அனுதாபம் தேவையில்லை. உனக்கு உதவி தேவையா என்று நான் போன்ற யாராவது கேட்டால் அது அவமானகரமானது என்று அவர் நினைப்பார்" எனவே எந்த நிதி உதவியையும் பெற்றுக்கொள்ள சாரிகா மறுத்துவிட்டார் என்று கமல் கூறினார்.
திருமணம் எப்போன்னு கேட்டது குத்தமா? சரவெடியாய் பொரிந்து தள்ளிய ஸ்ருதி ஹாசன்!
சாரிகா மீண்டும் 2020 இல் அமேசான் பிரைம் வெப் சீரிஸானா மாடர்ன் லவ் மும்பை மூலம் மீண்டம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அவர் கடைசியாக நடித்த படம் சூரஜ் பார்தியாவின் உன்சாய். என்பது குறிப்பிடத்தக்கது.