தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினிகாந்த், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தாடி பாலாஜி. வெள்ளி திரையை தொடர்ந்து. சின்ன திரையிலும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தன்னுடைய மனைவி நித்யாவுடன், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபலமானவர்.
அப்போதைக்கு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது போல் இருவரும் காட்டிக் கொண்டாலும், பின்னர் தொடர்ந்து நித்யா தன்னுடைய மகள் போஷிகாவுடன் தனியாகவே வசித்து வருகிறார்.
நித்யா தன்னுடைய மகள் மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு எதிரே... ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வசித்து வருகிறார். மேலும் அடிக்கடி நித்யாவுக்கும், எதிர் வீட்டில் வசித்து வரும் மணிக்கும் சண்டை ஏற்பட்டு உள்ளது. எனவே இவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, நடுராத்திரியில் யாரும் இல்லாத நேரத்தில்... ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி வீட்டின் மீது நித்யா கல் எறிந்து தாக்கியுள்ளார். இந்தக் கல் அவர் வீட்டில் மீது பட்டு பின்னர் அவருடைய வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார் மீதும் பட்டு கண்ணாடி உடைந்துள்ளது.