வாரிசு
வாரிசு படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் காம்பினேஷனில் உருவாகும் 2ஆவது படம் தளபதி67. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது
தளபதி67
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் டீக்கடை உரிமையாளராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக பகவதி படத்தில் விஜய் டீக்கடை நடந்து வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகுதான் தனது தம்பிக்காக ஒரு டானாக அவதாரம் எடுத்தார்.
தளபதி67 பூஜை
அதே போன்று ஒரு கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். அதுவும், இந்தப் படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. தளபதி67 படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தளபதி67
தளபதி67 படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜூன், அர்ஜூன் தாஸ், மன்சூர் அலி கான், நிவின் பாலி, ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
த்ரிஷா
கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி67 படத்தில் விஜய்ய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய் வீட்டிற்கு அருகில் ரூ.35 கோடியில் நடிகை த்ரிஷா புதிதாக வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக அஜித் வீட்டிற்கு அருகில் ரூ.5 கோடியில் புதிய பிளாட் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் கிங் அர்ஜூன்
முதல் முறையாக விஜய் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இணைந்து இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் ஆக்ஷன் கிங் அதற்காக தனது கெட்டப்பை மாற்றி புதிய லுக்கில் காணப்படுகிறார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கெட்டப்பைப் பார்க்கும் போது விஜய்க்கு வில்லனாக கூட நடிப்பார் என்று தெரிகிறது.
கௌதம் மேனன்
விஜய் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைவது முதல் முறை. இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது இருவரும் தளபதி67 படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், கௌதம் மேனன் ஏஜென்டாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சஞ்சய் தத்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், சஞ்சய் தத் ரா ஏஜென்டாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
மன்சூர் அலி கான்
மின்சார கண்ணா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், தேவா மற்றும் வசந்த வாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மன்சூர் அலி கான் மற்றும் விஜய் இருவரும் இணைந்து தளபதி67 படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் மன்சூர் அலி கான் ரா ஏஜென்டாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
மிஷ்கின்
யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்போது எப்படி அண்ணா என்று அழைத்தாரோ அதே போன்று தான் இப்போதும் அழைக்கிறார். இந்த உடம்பை வைத்தே அவருடன் சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன். வாய் எல்லாவற்றையும் அடித்து உடைத்துவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எந்தவித பதற்றமும் இல்லாமல் படத்தை தெளிவாக இயக்குகிறார். ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக எடுத்துக் கொடுக்கிறார் என்று ஒரு நிகழ்ச்சியில் தளபதி67 படம் குறித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரக்ஷித் ஷெட்டி
கன்னட சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், இயக்குநரானகவும் விளங்கும் ரக்ஷித் ஷெட்டி தளபதி67 படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
நிவின் பாலி
விஜய் மற்றும் நிவின் பாலி இருவரும் இணைந்து தளபதி67 படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரியா ஆனந்த்
முதல் முறையாக தளபதி67 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ப்ரியா ஆனந்த் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.