தன்னைவிட 4 வயது அதிகமான சீரியல் நடிகையை காதலித்து கரம்பிடித்தார் ‘பசங்க’ பட குழந்தை நட்சத்திரம் கிஷோர்

First Published | Mar 23, 2023, 5:42 PM IST

சின்னத்திரை நடிகை ப்ரீத்தி குமார் தன்னை விட 4 வயது இளையவரான பசங்க பட நடிகர் கிஷோரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிஷோர். இப்படத்தில் அன்புக்கரசி என்கிற கேரக்டரில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் கிஷோர்.

இப்படத்திற்காக கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பசங்க படத்திற்காக அவர் பெற்று இருந்தார். இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

Tap to resize

அந்த வகையில் இவர் அடுத்ததாக விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படத்தில் மார்க்கெட்டில் வேலை செய்யும் இளைஞராக நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

தற்போது படங்களில் ஹீரோவாகவும் நடித்து வரும் கிஷோர், அண்மையில் தனது காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார். அவர் வேறு யாரும் இல்லை சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் தான். இவர்களது காதல் சோசியல் மீடியாவில் பேசு பொருளாகவும் ஆனது. இதற்கு காரணம் இவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் தான்.

இதையும் படியுங்கள்... Rajinikanth: ஜெயிலர் படப்பிடிப்புக்காக கொச்சிக்கு பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ..

இருவருக்கும் 4 வயது வித்தியாசம். கிஷோரைவிட ப்ரீத்தி 4 வயது பெரியவர் என்பதால், இவர்களது காதல் குறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த ஜோடி காதலுக்கு வயதில்லை என்கிற கொள்கையுடன் தங்களின் ரொமான்ஸை தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில், கிஷோர் - ப்ரீத்தி குமார் ஜோடிக்கு தற்போது திருமணம் ஆகியுள்ளது. இதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கிஷோர் - ப்ரீத்தி குமார் ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ப்ரீத்தி குமார் சின்னத்திரையில், நெஞ்சம் மறப்பதில்லை, லட்சுமி வந்தாச்சு, சுந்தரி நீயும் சுந்தரி நானும், பிரியமானவள், வானத்தைப்போல என ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். அவருக்கு தற்போது 32 வயது ஆகிறது. அவர் தன்னைவிட 4 வயது இளையவரான கிஷோரை திருமணம் செய்துகொண்டது தான் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது - ஜேம்ஸ் வசந்தன் பாய்ச்சல்

Latest Videos

click me!