கோமாளி கதை திருட்டுக்கு பஞ்சாயத்து பண்ணிய பார்த்திபனை ‘லவ் டுடே’வில் பழிவாங்கிய பிரதீப் - வெளியான பகீர் தகவல்

First Published | Mar 17, 2023, 11:08 AM IST

‘பக்காவா பேசிக்கிட்டு இருந்த நீ.. பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியே’னு லவ் டுடே படத்தில் இடம்பெற்று இருக்கும் டயலாக் பின்னணியில் உள்ள உள்குத்தை பார்த்திபன் விவரித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். குறிப்பாக சமீபத்தில் இவர் ஒரே ஷாட்டில் படமாக்கிய இரவின் நிழல் திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கோமாளி படத்தின் போது தான் பஞ்சாயத்து பண்ணியதாகவும், அதனை மனதில் வைத்துக்கொண்டு தன்னை சீண்டும் வகையில் லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் டயலாக் வைத்திருந்தது பற்றியும் பார்த்திபன் கூறி உள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் லவ் டுடே. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்திருந்தது. அப்படத்தில் ‘பக்காவா பேசிக்கிட்டு இருந்த நீ.. பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியே’னு ஒரு டயலாக் இடம்பெற்று இருக்கும். இந்த டயலாக் பின்னணியில் உள்ள உள்குத்தை சமீபத்திய பேட்டியில் விவரித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... சிறுவயதில் அச்சு அசல் சிவாங்கி போலவே இருக்கும் ராதிகா... வைரலாகும் சரத்குமார் மனைவியின் Childhood போட்டோ

Tap to resize

லவ் டுடே படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றிருந்த பார்த்திபன், அந்த டயலாக் கேட்டு முதலில் சிரித்துவிட்டாராம். நல்லா இருந்த நீ... என்னடா பைத்தியம் ஆகிட்டியே என்பதை சொல்வதற்காகவே அந்த டயலாக் வைக்கப்பட்டுள்ளது என்பது அவருக்கு பின்னர் தான் தெரியவந்துள்ளது. பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவர், ஒரு கதை ஒன்றை தயார் செய்து வைத்திருந்தாராம். அந்தக் கதையும் கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக பிரச்சனை எழுந்துள்ளது. 

இதையடுத்து பாக்யராஜ் முன்னிலையில் இந்த கதை சர்ச்சை குறித்து பேசி தனது உதவி இயக்குனருக்காக ரூ.10 லட்சம் வாங்கி கொடுத்திருக்கிறார் பார்த்திபன். இதெல்லாம் கோமாளி பட ரிலீஸ் சமயத்தில் நடந்துள்ளது. இதை மனதில் வைத்து தான் லவ் டுடேவில் அப்படி ஒரு டயலாக்கை பிரதீப் வைத்திருந்ததாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பிரதீப் அந்த டயலாக்கை படத்தில் வைத்திருந்தாலும், அவரை அந்த பேட்டியில் பாராட்டி பேசி இருந்தார் பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... ரோபோ சங்கருக்கு என்னாச்சு? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்- எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே

Latest Videos

click me!