Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ

Published : May 25, 2026, 01:01 PM IST

This week Bakrid Special Theatre and OTT Releases : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
தியேட்டர் ரிலீஸ் படங்கள்

தியேட்டரில் சூர்யா நடித்த கருப்பு படம் வெற்றிநடைபோட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக அதற்கு போட்டியாக எந்த தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகாமல் இருந்தன. ஆனால் இந்த வாரம் தமிழ் படங்கள் மீண்டும் தியேட்டர் நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளன. இந்த வாரத்தில் கவனிக்கத்தக்க படங்கள் என்றால் அது பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ மற்றும் அர்ஜுன் நடித்த பிளாஸ்ட்.

பரிமளா அண்ட் கோ

இதில் பரிமளா அண்ட் கோ திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, யோகிபாபு, சிங்கம்புலி, மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் மே 28ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

பிளாஸ்ட்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள படம் பிளாஸ்ட். இப்படத்தை சுபாஷ் கே ராஜ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அபிராமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமும் பக்ரீத் பண்டிகையான மே 28 அன்று திரைக்கு வருகிறது.

இதுதவிர ஹபீபி, காட்டாளன், லஷ்மிகாந்தன் கொலை வழக்கு உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரைக்கு வர உள்ளன.

24
ஓடிடி ரிலீஸ் என்னென்ன?

தியேட்டர்களில் புதுப் படங்கள் வெளியாகும் அதேவேளையில், ஓடிடி ரசிகர்களுக்கும் இந்த வாரம் ஒரு நல்ல விருந்து காத்திருக்கிறது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோ சீரிஸ் முதல் காமெடி த்ரில்லர்கள் வரை பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் மே 24 முதல் மே 31 வரை ஸ்ட்ரீம் ஆகவுள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

கர (Kara)

தனுஷ் நடித்த கிராமத்து ஆக்‌ஷன் படமான 'கர', தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு இப்போது ஓடிடிக்கு வருகிறது. தற்போதைக்கு தமிழ் வெர்ஷன் ரிலீஸ் உறுதியாகியுள்ளது, மற்ற மொழி டப்பிங் வெர்ஷன்களும் வர வாய்ப்புள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 28ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

Untold UK: Vinnie Jones

கால்பந்து உலகின் சுவாரஸ்யமான கதைகளுடன் இந்த சீரிஸ் வருகிறது. பிரபல கால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் கெரியர் பற்றிய சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறும். இது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மே 26ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

My 2 Cents

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஜீரோகெல்கேர் உருவாக்கிய 2D அனிமேஷன் சீரிஸ் 'My 2 Cents'. ஒரு சிறு தொழில் நடத்தும் இரண்டு நபர்களின் வாழ்வில் வரும் பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளைச் சுற்றி கதை நகர்கிறது. இது மே 27 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

A Good Girl’s Guide to Murder Season 2

முதல் சீசனின் நிகழ்வுகளுக்குப் பிறகு, பிப் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படுகின்றன. ட்ரூ க்ரைம் பாட்காஸ்ட் மூலம் புகழ் பெற்ற அவள், மீண்டும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறாள். மே 27 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Spider-Noir

நிக்கோலஸ் கேஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'Spider-Noir' சீரிஸ், இந்த வாரத்தின் மிகவும் சுவாரஸ்யமான ஓடிடி ரிலீஸ்களில் ஒன்றாகும். இது ஸ்பைடர்மேனின் ஒரு ஸ்பெஷல் நோய்ர் வெர்ஷன் கதை. பிளாக் அண்ட் ஒயிட் மற்றும் கலர் என இரண்டு வெர்ஷன்களிலும் வெளியாவது இதன் சிறப்பு. மே 27 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது.

34
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்கள்

Roommates

நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் ஒரு சிறிய சண்டை எப்படி ஒரு பெரிய ஈகோ மோதலாக மாறுகிறது என்பதுதான் 'Roommates' கதை. கன்னட காமெடி டிராமா ரசிகர்களுக்கு இந்த சீரிஸ் ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். மே 27 முதல் ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

Brothers And Sisters

குடும்ப ரகசியங்கள் மற்றும் உணர்ச்சிகளின் பின்னணியில் உருவான தமிழ் குடும்ப டிராமா சீரிஸ் 'Brothers And Sisters'. ஒரு குடும்பப் பெரியவர் மறைத்து வைத்த ரகசியத்தால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களை இதில் காட்டுகிறார்கள். இந்த தமிழ் வெப் தொடர் மே 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

The Four Seasons 2

1981-ல் வந்த ஆலன் ஆல்டா திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட 'The Four Seasons 2', நடுத்தர வயது மக்களின் வாழ்க்கை, இழப்புகள் மற்றும் புதிய தொடக்கங்களை உணர்வுப்பூர்வமாக காட்டுகிறது. இந்த வெப் தொடரை மே 28 முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

44
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

Jetlee

தெலுங்கு காமெடி த்ரில்லர் படமான 'ஜெட் லீ'யில் சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு விமானத்தில் சிக்கும் விசித்திரமான சூழ்நிலைகளைச் சுற்றி கதை நகர்கிறது. ரியா சிங்கா, வெண்ணெலா கிஷோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மே 25ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Cousins & Kalyanams

ஆறு கசின்ஸின் வாழ்க்கை பயணம், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளுடன் உருவான டிராமெடி சீரிஸ் 'Cousins & Kalyanams'. மொத்தம் 60 எபிசோடுகளுடன் இந்த ஷோ உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மே 29 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

Murder Mindfully 2

ஜெர்மன் டார்க் காமெடி சீரிஸான 'Murder Mindfully 2', மாஃபியா வழக்கறிஞர் பிஜோர்ன் டீமெலின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. குற்ற உலகத்தை மைண்ட்ஃபுல்னஸ் மூலம் அவர் எப்படி சமநிலைப்படுத்துகிறார் என்பதை இந்த சீரிஸ் காட்டுகிறது. மே 28 முதல் இந்த வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories