Trisha : விஜய், அஜித், சூர்யா... 3 பேருக்கும் திரிஷா தான் லக்கி சார்ம்! அடடே இப்படி ஒரு ஒற்றுமையா?

Published : May 25, 2026, 10:22 AM IST

Trisha Krishnan Box Office Hits : தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்தவர் என்கிற பெருமையை நடிகை திரிஷா பெற்றுள்ளார்.

PREV
14
Box Office Queen Trisha

தமிழ் சினிமாவுல எத்தனையோ ஹீரோயின்கள் வந்து போயிருக்காங்க. ஆனா, 20 வருஷமா தன்னோட இடத்தை கெட்டியா பிடிச்சு, இன்னைக்கும் டாப் ஹீரோயினா இருக்குற ஒரே ஆள் நம்ம திரிஷா கிருஷ்ணன்தான். இப்போ சோஷியல் மீடியாவுல திரிஷாவோட பேர்தான் செம டிரெண்டிங். அதுக்கு காரணம், தமிழ் சினிமாவின் மூன்று சூப்பர் ஸ்டார்களின் கெரியரில் அவர் ஒரு 'காமன் ஃபேக்டர்'-ஆக இருப்பதுதான். சொல்லப்போனால் அந்த மூன்று ஹீரோக்களுக்கும் லக்கி சார்ம் ஆக இருந்திருக்கிறார் திரிஷா. அதன் பின்னணியை பார்க்கலாம்.

24
மூணு ஸ்டார் ஹீரோக்கள்... ஒரே ஹீரோயின்!

தமிழ் சினிமாவின் 'பிக் த்ரீ' என அழைக்கப்படும் தளபதி விஜய், அஜித் குமார், மற்றும் சூர்யா ஆகியோரின் சினிமா வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த படங்களில் திரிஷாதான் ஹீரோயின். இந்த ஆச்சரியமான ஒற்றுமைதான் இப்போ பேச்சாகி இருக்கு. இதைப் பார்த்த ரசிகர்கள், திரிஷாவை 'பாக்ஸ் ஆபிஸின் லக்கி ராணி' என்று கொண்டாடி வருகின்றனர். ஒரு சிலரோ திரிஷாவை பாக்ஸ் ஆபிஸ் குயின் எனவும் வர்ணித்து வருகிறார்கள்.

34
திரிஷா மேஜிக்

2023-ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படம், விஜய்யின் கெரியரிலேயே அதிகபட்சமாக 605.90 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த மெகா ஹிட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது நம்ம திரிஷாதான். பல வருஷங்களுக்குப் பிறகு விஜய்-திரிஷா ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமானார்கள். அதேபோல, அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) படம் உலகளவில் சுமார் 248.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திலும் திரிஷாதான் முக்கிய கதாநாயகி. அதுமட்டுமில்ல, சூர்யா நடிப்பில் 'கருப்பு' படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இங்கேயும் திரிஷாதான் ஹீரோயின்.

44
வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ரியாக்‌ஷன்!

அதாவது, இந்த மூன்று டாப் ஹீரோக்களின் கெரியர் பெஸ்ட் படங்களில் திரிஷாவே கதாநாயகி என்பதுதான் ஸ்பெஷல். ஞாயிற்றுக்கிழமை அன்று, ரசிகர் ஒருவர் இந்த தகவலைப் பதிவிட்டிருந்தார். அதில், "விஜய்யின் அதிக வசூல் (லியோ), அஜித்தின் அதிக வசூல் (GBU), சூர்யாவின் அதிக வசூல் (கருப்பு)... எல்லாத்துலயும் திரிஷா காமன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இந்த எல்லா மெகா ஹிட் படங்களின் காமன் ஃபேக்டர் ஒன் அண்ட் ஒன்லி திரிஷா கிருஷ்ணன்" என்று பாராட்டியிருந்தார்.

இந்த போஸ்ட்டை திரிஷா தனது பக்கத்தில் ரீ-ஷேர் செய்து, ஒரு அழகான 'ஹார்ட் எமோஜி' போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மொத்தத்தில், 43 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் திரிஷா, கோலிவுட்டின் 'அல்டிமேட் குயின்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா என எல்லோருக்கும் பிடித்த ஹீரோயினாக இருக்கும் திரிஷாவின் இந்த 'லக்கி' பயணம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories