அண்ணன் - தம்பிகள் பாசம், என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும், கூட்டு கும்பத்தில் உள்ளவர்கள் எப்படி விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.
எனவே, இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இந்த சீரியலில் தற்போது புதிதாக ஒரு நாயகி இணைந்துள்ளார்.
இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள. தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவது நாம் அறிந்தது தான்.
மேலும் கூடுதல் சுவாரஸ்யம் என்றால், பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு, தங்களது வாழ்க்கையை ரசித்து வாழ துவங்கியுள்ள கதிர் - முல்லை காதல் காட்சிகள். அதே போல் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவும் தன்னுடைய சொதப்பல் செயல்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுக்கும் விதமாக, கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக நடிகை ஒருவரை இறங்கியுள்ளது சீரியல் குழு.
அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல தொடர்களில் நடித்த சத்யசாய் கிருஷ்ணா அறிமுகமானார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அனுஷ்கா என்பவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இருப்பினும் எதுவும் பெரிதாக தொடர்வது போல் தெரியவில்லை.
இந்நிலையில் தற்பொழுது புதிதாக தீபிகா என்பவரை களமிறக்கியுள்ளனர். தீபிகாவாவது கண்ணனுக்கு ஜோடியாக தொடர்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.