‘சித்ரா நடத்தை மீதான ஹேமந்தின் சந்தேகமே தற்கொலைக்கு காரணம்’.. நீதிமன்றத்தில் தாக்கலான பரபரப்பு அறிக்கை...!

First Published | Jan 20, 2021, 5:36 PM IST

தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் அதே போல தான் சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான விஜே சித்ரா டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
Tap to resize

கிட்டதட்ட 15 பேரிடம் நடத்தப்பட்ட 16 பக்க விசாரணை அறிக்கையை கடந்த மாதம் கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
தற்போது மத்திய குற்றப்பிரிவிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சித்ராவின் கணவர் ஹேமந்த் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் பத்தாண்டு கால நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரோஹித், சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் ஹேமந்திற்க்கு பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்ததாகவும், பல முறை எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் அதே போல தான் சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.
சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்ததாகவும், அனைத்து தகவல்களும் தெரிந்த தன்னை இதுவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹேம்நாத்தின் சந்தேகத்தால் தான் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நடிகை சித்ராவின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!