கிண்டல் செய்த ரசிகர்..! இதுக்கே 7 வருஷம் ஆகிடுச்சு பிரதர்... உருக வைத்த விஜய் டிவி தீனா..!

First Published | Jan 20, 2021, 5:12 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் உங்கள் திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.
 

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'மாஸ்டர்' படம், மிகப்பெரிய வசூலையும் விமர்சகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி தவிர நாயகி மாளவிகா மோகனன் உள்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்தது.
Tap to resize

ஆனால் பெரும்பாலான பிரபலங்கள், கதாநாயகி உட்பட ஒரு சில காட்சிகளே வந்துபோகும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று ’கைதி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த தீனா, ’மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார்.
’கைதி’ படத்தை போலவே தீனாவுக்கு இந்த படத்திலும் முக்கியத்துவமான வேடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ’மாஸ்டர்’ படத்தில் தீனா நடித்த காட்சிகள் ஒரு சில வினாடிகள் மட்டுமே வந்து போனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ பட குழுவினர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்த போது, அதற்கு ஒரு ரசிகர், ‘ நீ இந்த படத்தில் வந்ததே ஏழு செகண்ட் தாண்டா’ என்று கிண்டல் செய்திருந்தார்.
இதற்கு உருக்கமான பதிலளித்துள்ள தீனா, ‘எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர், 7 செகண்ட் வருவதற்கே எனக்கு ஏழு வருஷம் ஆச்சு’ என்று உருக்கமான பதிவிட பலர் இந்த பதிவிற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!