சும்மா இருந்தாரோ? இல்ல கடை பணத்தை திருடினாரோ? Pandian Stores 2 இந்த வாரம் என்ன நடக்கும்?

Published : Sep 28, 2025, 08:59 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கியமான காட்சிகளான தங்கமயிலின் அப்பா மாணிக்கம், பாண்டியனின் கடையில் வேலைக்கு சேர்ந்தார். முதல் நாளிலேயே கல்லாவிலிருந்து 500 ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டார். 2ஆவது நாளில் மளிகைப் பொருட்களை மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றார். ஏற்கனவே தனது மாமனார் கடையில் வேலை பார்ப்பது சரவணனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பாவிடம் சொல்லியாச்சு. எந்த பலனும் இல்லை. ஏற்கனவே வேலைக்கு வருவதற்கு முன்னதாக மனைவியிடமும் சொல்லியாச்சு. ஆனால், அவர் சொல்லவில்லை.

27
தங்கமயில்

இந்த நிலையில் தான் இனி இந்த வாரம் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோவில் சரவணன் தனது மனைவி தங்கமயிலிடம் சண்டை போட்டுள்ளார். அதில், ஏய், உன்னிடம் உன்னுடைய அப்பாவை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல் அப்படின்னு தான் சொன்னேன். அப்புறம் எதுக்கு வந்தார். என்னமோ கடை முதலாளி மாதிரி கல்லாவில் உட்காருகிறார்.

37
கடையில் வேலை என்று கேட்ட பழனிவேல்

உட்கார்ந்தவர் சும்மா உட்கார்ந்தாரோ இல்லை கடை பணத்தை திருடினாரோ? ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான்களை நம்ம கடையிலிருந்து மூட்டை மூட்டையாக அள்ளிக் கொண்டு போகிறார். ஏன், அந்த ஆளுக்கு வெட்கமே கிடையாதா? அதற்கு மயில் இனிமேல் என்னுடைய அப்பாவை கடையில் பச்ச தண்ணீர் கூட குடிக்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன் என்றார்.

47
கடைக்கு வந்த தங்கமயில்

இதை தொடர்ந்து கடைக்கு சென்ற அவரை அவருடைய அப்பா வா வந்து கல்லாவில் உட்காரு, இது நம்ம கடை தான, முதலாளியம்மா கல்லாவில் உட்கார்ந்த பிறகு தான் கல்லாவே கலை கட்டுது என்று மயிலின் அப்பா மாணிக்கம் கூறினார். அதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது. இது அந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

57
மாணிக்கத்தை வைத்து சண்டை போட்ட சரவணன்

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மாணிக்கம், கடையிலிருந்து எடுத்துச் சென்ற மளிகைப் பொருட்களை அவரது வீட்டில் கொடுக்கும் போது என்ன சொல்லி கொடுத்தார் என்ற கேள்வியும், கடையிலிருந்து எடுத்த ரூ.500ஐ என்ன சொல்லி கொடுத்தார் என்ற கேள்வியும் எழுகிறது. இத்தனை நாட்களாக அவர் இந்த சீரியலிலேயே இல்லை. இந்த சூழலில் தான் இப்படியொரு காட்சிக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குழுவினர் மீண்டும் அவரை தொடருக்குள் அழைத்து வந்துள்ளனர்.

67
கல்லாவில் உட்கார்ந்த தங்மயில்

மாணிக்கம் கடையில் செய்த அலப்பறைகள் பாண்டியனுக்கு தெரிய வருமா? அப்படி தெரியவரும் போது அவரது ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. ஏற்கனவே தங்கமயில் செந்தில் மற்றும் கதிருக்கு நிலத்தை விற்று ரூ.10 லட்சம் கொடுத்த நிலையில் உங்களுக்கு என்று எதுவும் கொடுக்கவில்லை என்று கூறி வந்தார். அதையெல்லாம் மனதில் கொண்டு தான் இப்போது அப்பாவும், மகளும் சேர்ந்து கொண்டு கடையில் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சுயநினைவை இழந்த பாரதிராஜா - கண்ணீருடன் கேட்ட மன்னிப்பு! சகோதரர் பகிர்ந்த ஷாக் தகவல்!

77
சக்திவேல், முத்துவேல் குடும்பம்

இதை வைத்து இனிவரும் காலங்களில் சீரியல் எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்படும். அரசி, கதிர் மற்றும் ராஜீ, செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் முடிந்த நிலையில் இப்போது தங்கமயில் மற்றும் சரவணன் தொடர்பான காட்சிகள் அரங்கேறியுள்ளது. இதற்கிடையில் கோமதியின் அண்ணன் வீட்டைப் பற்றிய காட்சிகள் இல்லவே இல்லை. இனிவரும் வாரங்கள் அவர்களது எபிசோடுகள் இடம் பெறும் என்று தெரிகிறது. மேலும், அவர்கள் பேசுவதற்கு கதிர் மற்றும் ராஜீயின் பாண்டியன் டிராவல்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'கோன் பனேகா கரோர்பதி' வருமான ஆதாரம் என்ன? அமிதாப் இந்த ஷோவின் உரிமையாளரா?

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories