
கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை நேர்த்தியாக இயக்கி பல வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் இமையம் பாரதிராஜா. ரஜினி, கமல், போன்ற பல நடிகர்களுக்கு ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரி அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய மூன்று லெஜெண்ட் நடிகர்களை வைத்து இயக்கிய பெருமையும் இவரையே சேரும். இந்நிலையில் இவருடைய தற்போதைய நிலை குறித்து, பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் சில உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.
கதறி அழும் குடும்பத்தினருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் - Karur Stampede குறித்து பிரபங்கள் கருத்து!
தன்னுடைய தந்தை பாரதி ராஜா போலவே, சினிமாவில் ஒரு இயக்குனராக மாறவேண்டும் என ஆசைப்பட்டவர் தான் மனோஜ் பாரதிராஜா. ஆனால் தன்னுடைய தந்தையின் ஆசைக்காக தன்னுடைய கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தாஜ் மஹால்' படத்தில் ஹீரோவாக களமிறங்கினார்.
கரூர் விஜய் கூட்டத்தில் திட்டமிட்டு மின் தடையா? நடந்தது என்ன? மின்சார வாரியம் விளக்கம்!
இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. அதே போல் ஏ.ஆர்.ரகுமானின் இசை இந்த படத்தின் கதைக்களத்துக்கே உயிர் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. இந்த படத்தை தொடர்ந்து, ’கடல் பூக்கள்’, ’வருஷமெல்லாம் வசந்தம்’, ’அல்லி அர்ஜுனா’, ’ஈரநிலம்’, ’சமுத்திரம்’, ’அன்னக்கொடி’, போன்ற பல படங்களில் நடித்தார். அதே போல் 'மார்கழி திங்கள்' என்கிற படத்தையும் இயக்கி இருந்தார்.
மனோஜ் பாரதிராஜாவுக்கு ஏற்கனவே இதயத்தில் இருந்த பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் இழப்பு அவரின் குடும்பத்தினரை மட்டும் அல்ல தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
தற்போது வரை மனோஜ் இழப்பில் இருந்து அவரது குடும்பம் மீண்டு வரவில்லை. குறிப்பாக தன்னுடைய ஒரே மகனை இழந்து பாரதிராஜா தினமும் கண்ணீர் விட்டு வருகிறார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் இன்றி இருக்கும் பாரதி ராஜா இந்த துயர சம்பவத்தில் இருந்து வெளியே வர... மலேசியா சென்றார். அங்கு இவரை அவரின் மகள் தான் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாரதி ராஜாவின் சமீபத்திய நிலை குறித்து அவரின் சகோதரர் ஜெயராஜ் பகிர்ந்துள்ள தகவல் தான் ரசிகர்களை அதிரவைத்துள்ளது. அதாவது பாரதி ராஜா தன்னுடைய மகன் நினைவில் எப்போதும் கண்ணீர் வடித்து வருவதாகவும், கடந்த 3 வருடங்களாகவே உடல் நிலை சரி இல்லாமல் இருக்கும் அவர், மனவேதனையால் இன்னும் சோர்ந்துவிட்டார். அவரின் உடல் நிலை மற்றும் மகன் பற்றிய நினைவுகள் வரக்கூடாது என்பதற்காகவே, திரைப்பட துறையை சேர்ந்த யாரையும் நாங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை. மகனின் நினைவால் தன்னுடைய நினைவாற்றலை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்.
அதே போல் ஒரு முறை என் கையை பிடித்து கொண்டு, உன்னை நான் என்னுடைய படங்களில் 10 - 15 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தி இருந்தால், இன்று நீயும் ஒரு நல்ல நிலைக்கு வந்திருப்பாய். அதை செய்ய தவறிவிட்டேன்... என்னை மன்னித்துவிடு என கைகளை பற்றி கொண்டு அழுதார் என... கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இவர் கூறிய தகவலை தொடர்ந்து, பாரதி ராஜாவுக்கா இப்படி ஒரு நிலை என ஆதங்கமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.