Manickam Packing Groceries in Pandian Stores 2 Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 597ஆவது எபிசோடில் பாண்டியனின் கடையில் வேலை பார்க்கும் மாணிக்கம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை மூட்டையாக கட்டிக் கொண்டு நடையை கட்டிய சம்பவம் நடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி பிரச்சனை முடிந்து கதிர் இப்போது புதிதாக பாண்டியன் டிராவல்ஸ் என்று சொந்தமாக டிராவல்ஸூம் திறந்துள்ளார். அவருடைய கனவும் நிறைவேறிவிட்டது. செந்திலும் அரசு வேலையில் இருக்கிறார். ஆனால், மூத்த மகன் சரவணன் தான் இப்போது கடையில் அப்பா பாண்டியனுக்கு உதவியாக இருக்கிறார். ஏற்கனவே வேலை பார்த்த குமரேசன் ஊருக்கு போயிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், பழனிவேலுவும் கடையில் வேலை பார்க்கிறார்.
ஆனால், பாண்டியனுக்கு கடைக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கமயிலின் அப்பா மாணிக்கம் கதிர் டிராவல்ஸ் வேலைக்கு கேட்ட சூழலில், தனது கடைக்கு ஆள் தேவைப்படுகிறது என்று சொல்லி தனது கடைக்கு வரச்சொன்னார். அவரும் முதல் நாள் வேலைக்கு வந்தார். ஆனால், வந்தவர் வேலை பார்க்கவில்லை. ராஜா வீட்டு செல்லப்பிள்ளை போன்று கூல்டிரிங்க்ஸ் குடிப்பது, வேர்க்கடலை சாப்பிடுவது என்று இருந்தார்.
இவ்வளவு ஏன் முதல் நாளே கல்லாப்பெட்டியில் கை வைத்தார். யாருக்கும் தெரியாமல் ரூ.500 எடுத்துக் கொண்டு தனது பையில் எடுத்து வைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து சரவணன் மற்றும் பழனிவேல் இருவரும் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது அதைப் பார்த்த மாணிக்கம், தனது மனைவி பாக்கியம் மளிகை சாமான் வாங்க வேண்டும் என்றார், நானும் மறந்துவிட்டேன், இப்போது நியாபகத்திற்கு வந்தது என்று சொல்லி தானும் மளிகை பொருட்களை மூட்டை மூட்டையாக பேக் பண்ண ஆரம்பித்துவிட்டார்.
அதில் இட்லி அரிசி, பிஸ்கட், மிளகு, பருப்பு வகைகள் என்று லிஸ்ட் கொஞ்சம் சாஸ்தியாத்தான் இருந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பழனிவேல் மற்றும் சரவணன் இருவரும் என்னதான் சொன்னாலும், அவர் அதையெல்லாம் கேட்பதாக இல்லை. மேலும், மளிகைப் பொருட்கள் என்னென்ன எடுத்தோம் என்று எழுதி வைக்க சொன்னார்கள்.
56
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அப்போது தான் ஸ்டாக் செக் பண்ணுவதற்கு ஈஸியாக இருக்கும் என்றார்கள். ஆனால், அதெல்லாம் உங்களுக்கு தான். நான் அப்படி செய்தேன் என்றால் சம்பந்தி கோபம் கொள்வார் என்று கூறியுள்ளார். அதோடு ஆட்டோவை வரச்சொல்லி பேக் செய்து வைத்திருந்த மளிகைப் பொருட்கள் மூட்டையை தூக்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், சரவணனுக்கு ஆத்திரமும், கோபமும் தான் கடைசி வரை மிஞ்சியது. அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
66
சரவணன் தங்கமயில் சண்டை
இனி வீட்டிற்கு சென்று தங்கமயிலிடம் சண்டை போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதைப் பற்றி இனி வரும் எபிசோடுகளில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.