தமிழ்நாட்டில் முன்னணி சேனல்களான சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்,
தமிழ்நாட்டில் சினிமாவுக்கு நிகராக சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் எப்பவுமே மவுசு இருக்கும். அந்த வகையில் இங்கு முன்னணியில் இருக்கும் சேனல்கள் என்றால் அது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான். இந்த மூன்று சேனல்களும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருவதால், வார வாரம் டிஆர்பி ரேஸில் இந்த சேனல்களின் சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அந்த வகையில் கடந்த வாரம் சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் 5 இடங்களை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
டாப் 5 சன் டிவி சீரியல்கள்
சன் டிவியில் அதிக வியூஸ் அள்ளிய சீரியல்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இராமாயணம் சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 6.85 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. இது 9.02 புள்ளிகளை பெற்றுள்ளது. இதையடுத்து 9.66 ரேட்டிங் உடன் மூன்றாவது இடத்தில் அன்னம், கயல் மற்றும் மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் உள்ளது. சிங்கப்பெண்ணே சீரியல் 9.99 டிஆர்பி உடன் இரண்டாம் இடத்தில் இருக்க, முதலிடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது. அதற்கு 10.14 புள்ளிகள் கிடைத்துள்ளன.
34
விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன?
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை தான் இந்த வாரம் முதலிடத்தில் உள்ளது. அந்த சீரியலுக்கு 7.82 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை அய்யனார் துணை சீரியல் பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 7.36 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. இதையடுத்து மூன்றாவது இடத்தில் 6.27 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. நான்காவது இடத்தை பிடித்துள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 6.25 புள்ளிகள் கிடைத்துள்ளன. ஐந்தாவது இடத்தை மகாநதி சீரியல் பிடித்திருக்கிறது. இதற்கு 5.26 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 சீரியல்கள் பட்டியலில் 5.42 புள்ளிகளுடன் கார்த்திகை தீபம் சீரியல் 5.42 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தை பிடித்து அயலி சீரியலுக்கு 5.22 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து 5.07 புள்ளிகள் உடன் அண்ணா சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தை பிடித்திருக்கும் வீரா சீரியலுக்கு கடந்த வாரம் 4.48 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. ஐந்தாம் இடத்தை ஆலியா மானசா நடிப்பில் புதிதாக ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 3.82 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.