விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 458ஆவது எபிசோடானது பழனிவேல் மற்றும் சுகன்யாவின் சண்டைக் காட்சிகளுடன் தொடங்குகிறது. இதில், 5 பேருக்கும் என்னால் சமையல் செய்ய முடியாது. நீங்க தான் எல்லா வேலையையும் செய்ய வேண்டும் என்று சுகன்யா வற்புறுத்தவே, தண்ணீர் பிடிப்பது, காய் கறி நறுக்குவது, வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது சரவணன் வீட்டிற்கு வருகிறார்.
24
Sukanya Slam Pazhanivel:
கல்யாணம் பண்ணது தான் நான் பண்ண தப்பு:
தனது மனைவிக்காக எல்லா வேலைகளையும் மாமா செய்து கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது சுகன்யா கிச்சனிலிருந்து உங்களை கல்யாணம் பண்ணது தான் நான் பண்ண தப்பு என்று திட்டுவதை எல்லாம் சரவணன் கேட்டுவிட்டார்.
மனைவியால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார் பழனிவேல்:
பிறகு சரவணன் மற்றும் பழனிவேல் இருவரும் சேர்ந்து மது குடித்துக் கொண்டே ஒருவருக்கொருவர் தங்களது பிரச்சனைகளை பேசிக் கொண்டனர். பழனிவேல் தனது மனைவியால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மனம்விட்டு பேசிவிட்டார். அப்போது தான் சரவணனுக்கு எல்லா உண்மையும் தெரிய வந்தது. ஆனாலும், வீட்டில் உள்ளவர்களிடம் நன்றாக பேசுகிறார். ஒருவேளை என்னை மட்டும் தான் அவருக்கு பிடிக்கவில்லையோ என்று பழனிவேல் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
44
Raji, Thangamayil and Meena Talking:
ராஜீ, தங்கமயில் மற்றும் மீனா பேசி கொண்டிருக்கிறார்கள்:
இறுதியாக மீனா, தங்கமயில் மற்றும் ராஜீ மூவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு தனது யாரது கணவர்கள் தங்களை மிஸ் செய்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் மீனாவின் கணவர் செந்தில் மட்டுமே அவரை ரொம்பவே மிஸ் செய்வதாக தெரிந்தது. சரவணன் போனை எடுக்கவில்லை. கடைசியில் கதிர் மற்றும் ராஜீ இருவரும் ஒருவருக்கொருவர் மிஸ் செய்கிறார்களா இல்லையா என்பது பற்றி பேசிக் கொண்டனர். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 458ஆவது எபிசோடு முடிகிறது. சரவணன் பழனிவேல் பிரச்சனை குறித்து இனிவரும் எபிசோடில் வீட்டில் பேசுவாரா? இல்லையா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.