‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தில் ரமேஷ் அரவிந்த், ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் இணைந்து நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
தயாரிப்பாளர் ஏ.ஆர். விக்யாத் இயக்கத்தில், உருவாக உள்ள ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி படம் மீதான ஆர்வத்தை தூண்டியது.
24
Ramesh Aravind And Ganesh:
ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ்:
அதே போல் ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் ஆகியோரின் கூட்டணி இணைவதால், படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சத்ய ராயல் தயாரிக்கும் இந்தப் படம் 1990களின் நடக்கும் கதையை மையப்படுத்தியது. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
34
Love and Friendship:
காதல் மற்றும் நட்பின் பின்னணியில் உருவாகி வருகிறது:
மேலும் போர், காதல் மற்றும் நட்பின் பின்னணியில் இப்படம் உருவாகி வருவது டீசரை பார்த்த போதே புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தில் சிக்ஸ் பேக் சுந்தரி நிஷ்விகா நாயுடுவும் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் கணேஷுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
44
Dance Master Jony:
ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்:
தற்போது இந்தப் படத்தின் ஒரு பாடல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ஏற்கனவே ‘சகத்’ படத்திலும் கணேஷ் மற்றும் நிஷ்விக, நடித்திருந்தனர். தற்போது இந்த ஜோடி ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.