Padayappa Re Release Daughter Fathers Emotional Moment : ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா அவரது 75ஆவது பிறந்தநாளன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இறந்த அப்பாவின் போட்டோவை எடுத்து சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் படையப்பா. 1999 ஆம் ஆண்டு வெளியானது. கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குபிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு படையப்பா திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் பரிசாக ரசிகர்களின் ஆசக்கினங்க திரையரங்குகளில் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த செய்தியை அறிவித்த நாள் முதலில் இருந்து ரசிகர்களால் பெரும் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தனர். தற்போது படம் வெளியான நிலையில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட வருகிறது.
24
ரஜினிகாந்த் பிறந்த நாள்:
ரஜினிகாந்த் பிறந்த நாள் டிசம்பர் 12 அன்று. இது சின்ன குழந்தைகள் கூட தெரியும் என்று ரசிகர்களால் கூறப்படும். ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் இருந்து மிக கஷ்டப்பட்டு கடின உழைப்பின் மூலம் முன்னேறியவர். பஸ் கண்டக்டர் பணிபுரிந்து திரைப்படத்தின் மூலம் முன்னேறி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த் 171 படத்திற்கு மேல் நடித்துள்ளார். நடித்திருக்கும் ஒவ்வொரு படமும் அவருக்கான தனி இடமும் தனி ஸ்டைலியும் அவர் ஒவ்வொரு படத்திலும் வைத்திருப்பார். ஸ்டைல் என்றாலே அது ரஜினி தான் என்பதே போல ஒவ்வொரு ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு ஸ்டைலை ரஜினிகாந்த் செய்திருப்பார்.
34
படையப்பா ரீ ரிலீஸ் திரைப்படம்:
படையப்பா திரைப்படம் கே எஸ் ரவிக்குமாரால் இயக்கப்பட்டு ரஜினியின் நடிப்பு வெளிவந்தது ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது இதில் முக்கிய கதாபாத்திரமாக, ரஜினிக்கு அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார் இந்த படத்தில் அவர் நடிப்புத் திறமையை அருமையாக வெளிப்படுத்தி இருப்பர். இதில் வரும் ஒவ்வொரு பாட்டும் 90ஸ் கிட்ஸ் மனதில் மிக ஆழ்ந்த இடத்தை பிடித்தது. இது முக்கிய கதாபாத்திரம் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் இவர்களின் நடிப்பு திறமை இந்த படத்திற்கு பெரும் இடத்தை தந்தது. 90ஸ் கிட்ஸ் நினைவுறுத்தும் வகையில் இந்த படம் வெளியான நிலையில் அனைவரும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து தற்போது டிரெண்டாகி வருகிறது.
44
டாடி லிட்டில் பிரின்சஸ்:
தற்போது இப்படத்தின் ரிலீசில் பெண் ரசிகை ஒருவர் தனது அப்பா ரஜினியின் தீவிரமான ரசிகர் என்பதால் தனது அப்பா இறந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் அப்பாவின் போட்டோவுடன் சென்று அவருக்கு என்ன தனி இருப்பிடம் அமைத்து இப்படத்தை பார்த்ததாக வீடியோவின் மூலம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரஜினி ரசிகர்களால் டிரெண்டாகி வருகிறது இப்படி ஒரு டாடி லிட்டில் பிரின்சஸ் நான் பார்த்ததே இல்லை என்பதை ரசிகர்கள் மத்தியில் வாய்மொழியாக கூறப்படுகிறது.