
தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் விஜய்யின் கடைசி படமாக வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே" தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது. வரும் 27ஆம் தேதி ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்குமி இந்தப் படம் ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிக்கும் படம் தான் பராசக்தி. இந்த படம் விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு போட்டியாக பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி 14-ஆம் தேதி அன்று பராசக்தியும் வெளியாகப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் நம்பிக்கை பூர்வமான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் ரசிகர்களுக்கிடையே பெரிய குழப்பம் ஏற்படுகிறது. ஹிந்தி போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட போகிறது என்பது தெரிய வருகிறது.
ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுதா கோங்குரா இயக்கத்தில் இப்படம் உருவாகி தவான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இப்படத்தில் இருந்து "அடி அலையே "என்னும் இன்னும் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் மிகவும் ட்ரெண்டாகியுள்ளது. பராசக்தி திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்ட பிறகு 100 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் இடம் பெற்று வெற்றி படமாகிறதா அதிக வசூலை பெற்று வணிக ரீதியாக திரைப்படம் வெற்றியடைகிறதா என்பதை பார்க்கலாம்.
பா ரஞ்சித் இயக்கத்தில் நீலம் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் வேட்டுவம். இந்தப் படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கெத்து தினேஷ் ஆர்யா போன்ற பிரபலமான நடிகர்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் ஜனநாயகத்திற்கு போட்டியாக வெளியாக போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை படகுழுவினரால் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் ரசிகர்களின் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் சர்தார் 2. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என்று தெரிகிறது. எனினும் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே கார்த்தி நடிப்பில் உருவாகி ரிலீஸிலிருந்து 2 முறை தள்ளிப்போன் வா வாத்தியார் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில் சர்தார் 2 படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் சுமார் 130 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மிக அதிக அளவில் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் அதிக வசூலை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்குமா பார்க்கலாம்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்க கூடிய படம் தான் டிரெயின். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெயராம் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் 2026ஆம் ஆண்டை எதிர்நோக்கியிருக்கிறது. மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறாப்படுகிறது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மெண்டல் மனதில். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தத் திரைப்படம் பாரலல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.