Pa Ranjith Will Direct First Dalit Cricketer Biopic : இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பா.இரஞ்சித், அடுத்ததாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்கிற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தார். ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் பா.இரஞ்சித். இப்படம் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
24
Rajinikanth, Pa Ranjith
ரஜினியுடன் பா.இரஞ்சித் பணியாற்றிய 2 படம்
மெட்ராஸ் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் பா.இரஞ்சித். அந்த வகையில் அவரை வைத்து இயக்கிய முதல் படமான கபாலி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரஞ்சித்தின் வேலையால் இம்பிரஸ் ஆன ரஜினி, தன்னுடைய அடுத்த படத்தையும் அவரையே இயக்க வைத்தார். அந்த வகையில் ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய இரண்டாவது படமான காலாவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரஜினியை வைத்து இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கிய பா.இரஞ்சித், அடுத்ததாக சார்பட்டா பரம்பரை என்கிற பாக்ஸிங் கதையம்சம் கொண்ட படத்தை இயக்கினார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் போன்ற படங்களை இயக்கினார் பா.இரஞ்சித். இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்விப் படங்களாகவே அமைந்தது.
44
Pa Ranjith Direct Biopic Film
பா.இரஞ்சித் இயக்க உள்ள பயோபிக் படம்
இதனால் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு உள்ள பா இரஞ்சித் தற்போது பயோபிக் படமொன்றை இயக்க தயாராகி வருகிறாராம். அதுவும் இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூ என்பவரின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளாராம் பா.இரஞ்சித். பலூவின் வாழ்க்கையை மையமாக வைத்து ராமச்சந்திர குஹா எழுதியுள்ள ‘A Corner Of A Foreign Field' என்கிற புத்தகத்தை தழுவி படமாக எடுக்க தனக்கு அழைப்பு வந்துள்ளதாக பா.இரஞ்சித்தே நிகழ்ச்சி ஒன்றில் கூறி உள்ளார்.