Good Bad Ugly Day 3 Box Office Collection : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவரின் 63வது திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் பிரசன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், அர்ஜுன் தாஸ், பிரபு, சிம்ரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.
24
Good Bad Ugly Ajith
அஜித்தின் மாஸ் விருந்து
குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்தது. மகனை காப்பாற்றும் கேங்ஸ்டர் தந்தையின் கதை தான் இந்த குட் பேட் அக்லி. பழைய கதையாக இருந்தாலும் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக படம் முழுக்க மாஸ் காட்சிகளையும் பில்டப்புகளையும் அடுக்கி விருந்து படைத்துள்ளார் ஆதிக். விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பின் அஜித்தின் தரமான கம்பேக் படமாக குட் பேட் அக்லி அமைந்துள்ளது. இப்படம் முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை ஆடி வருகிறது.
குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.30 கோடி வசூலித்து புது வரலாறு படைத்தது. முதல் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.78.5 கோடி வசூலித்த குட் பேட் அக்லி, மூன்றாம் நாள் முடிவில் 100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டி உள்ளது. இந்த ஆண்டு 100 கோடி வசூலித்த மூன்றாவது தமிழ் படம் குட் பேட் அக்லி. இதற்கு முன்னர் விடாமுயற்சி மற்றும் டிராகன் ஆகிய படங்கள் இந்த சாதனையை படைத்திருந்தன. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அதிவேகமாக 100 கோடி வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி படைத்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் குட் பேட் அக்லி வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
44
Good Bad Ugly Beat Vidaamuyarchi
விடாமுயற்சி லைஃப் டைம் வசூலுக்கு ஆப்பு
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் மொத்தமாகவே ரூ.137 கோடி தான் வசூலித்திருந்தது. அந்த படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை இன்றே குட் பேட் அக்லி திரைப்படம் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தின் இன்றைய தினத்திற்கான முன்பதிவு நிலவரப்படி தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11.3 கோடி வசூல் செய்துள்ளது. கோட் படத்துக்கு அடுத்தபடியாக 4ம் நாளில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட திரைப்படம் குட் பேட் அக்லி தான் என்பது குறிப்பிடத்தக்கது.