நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா?சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோஸ்!

Published : Apr 12, 2025, 08:11 PM ISTUpdated : Apr 12, 2025, 08:12 PM IST

சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில், நடிகர் ஸ்ரீ தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
15
நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா?சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோஸ்!
Kana Kaanum Kalangal Fame Sriram

விஜய் டிவி மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஸ்ரீ:

விஜய் டிவி மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஸ்ரீ. 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்'  சீசன் 2 தொடரில் நடிகராக அறிமுகமான இவர், இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற 'வழக்கு எண் 18 / 9 திரைப்படத்தில் நடித்தார்.

25
Sriram Natrajan First Film

ஸ்ரீயின் முதல் படம்:

இந்த படத்தில் வேலுசாமி என்கிற கதாபாத்திரத்தில் ஸ்ரீ நடித்திருந்தார். மேலும் ஊர்மிளா, மிதுன் முரளி, மனிஷா யாதவ், ரித்திகா ஸ்ரீநிவாஸ், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இரண்டு விதமான காதல் கதையை இந்த திரைப்படம் காட்டியிருந்தது. உண்மையான காதல் அழகை பார்ப்பதில்லை என்கிற கருத்தையும் பாலாஜி சக்தியில் வெளிப்படுத்தி இருந்தார்.

35
Sri Super hit Film

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:

இந்த படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ, 2013 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ஸ்ரீக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. பின்னர் சோன் பப்புடி, வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று, போன்ற தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.

45
Bigg boss contestant:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ:

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், உள்ளே வந்த 4 நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் இருக்க முடியாது என ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து, சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் ஸ்ரீ, தற்போது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

55
What happened?

சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டுள்ளார்:

வெள்ளை நிற ஹேர் கலரிங் செய்து நீளமாக முடி வளர்ந்துள்ள ஸ்ரீ... உடை அணியாமல் சில சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டுள்ளார். சில பதிவுகள் புரியாத விதத்தில் புதிர் போடும் விதத்தில் உள்ளது. அதே நேரம்  ரசிகர்களுக்கு பல கேள்விகளையும் எழ வைத்துள்ளது. இவர் பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? என்று கூட சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர், "நீங்கள் ஒரு சிறந்த நடிகர் உங்களுக்கு என்ன ஆனது ?,  மன அழுத்தத்தால் இப்படி ஆகிவிட்டிர்களா?, போதைக்கு அடிமையாகி விட்டீர்களா? என தபல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கூடிய விரைவில் ஸ்ரீ தன்னை சுற்றி வரும் சர்ச்சைகளுக்கு பதில் சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories