Dhruv Vikram Dating With Bison Heroine : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். அவர் தன்னுடைய மகன் துருவ் விக்ரமையும் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இதையடுத்து மகனுடனே சேர்ந்து மகான் என்கிற படத்தில் நடித்தார். அந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மகான் படத்தின் வெற்றிக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனார் துருவ் விக்ரம்.
25
Dhruv Vikram - Anupama Parameswaran
துருவ் விக்ரம் - அனுபமா காதல்
மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு பைசன் காளமாடன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கபடி வீரனாக நடிக்கிறார் துருவ் விக்ரம். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்நிலையில், துருவ் விக்ரமும், அனுபமாவும் காதலிப்பதாகவும் தற்போது அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் பரவி வந்தது.
35
Dhruv - Anupama Dating
லீக்கான புகைப்படம்
ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகர் - நடிகையை பற்றி கிசுகிசு வருவது வழக்கம் தான். அதேபோல தான் துருவ் விக்ரம் - அனுபமா ஜோடியின் காதல் செய்தியும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக அவர்கள் இருவரும் லிப்லாக் முத்தமிட்டபடி எடுத்த புகைப்படம் இணையத்தில் கசிந்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனால் அவர்கள் இருவரும் காதலிப்பது உறுதி என அடித்துக் கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.
விக்ரம் மகன் துருவ்வுக்கு தற்போது 27 வயது ஆகிறது. ஆனால் அவரை விட அனுபமா வயதில் மூத்தவர். அனுபமாவுக்கு 29 வயது ஆகிறது. தன்னைவிட 2 வயது மூத்த நடிகையை தான் துருவ் விக்ரம் காதலிக்கிறார். இருவரும் பைசன் படத்தில் ஜோடியாக நடித்தபோது பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த சீக்ரெட் காதல் ஜோடி தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளனர்.
55
Dhruv Vikram love Rumours
துருவ் விக்ரமும்... காதல் சர்ச்சையும்
நடிகர் துருவ் விக்ரம் காதல் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் ஆதித்ய வர்மா படத்தில் தன்னுடன் நடித்த பனிடா என்கிற நடிகையை துருவ் காதலிப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது அனுபமா உடன் அவர் லிப்கிஸ் அடித்த புகைப்படம் லீக் ஆகி உள்ளது. இப்படி தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்ந்து காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார் துருவ். நடிகர் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் இப்படி தான் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். தற்போது துருவ்வும் அதேபோன்று சிக்குவதால், அடுத்த சிம்புவாக மாறுகிறாரா துருவ் என்கிற கேள்வி எழத் தொடங்கி உள்ளது.