அன்று கண்ணழகி; இன்று இடுப்பழகி! பிரியா வாரியரை மீண்டும் டிரெண்டாக்கிய குட் பேட் அக்லி!

Published : Apr 13, 2025, 09:32 AM ISTUpdated : Apr 13, 2025, 09:33 AM IST

கண்ணடித்து பேமஸ் ஆன நடிகை பிரியா வாரியர் தற்போது குட் பேட் அக்லி படத்தின் மூலம் மீண்டும், பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகி இருக்கிறார்.

PREV
14
அன்று கண்ணழகி; இன்று இடுப்பழகி! பிரியா வாரியரை மீண்டும் டிரெண்டாக்கிய குட் பேட் அக்லி!

Sensational Heroine Priya Parakash Varrier : மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் பேமஸ் ஆவது ஒன்றும் புதிதல்ல. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், ராதா என தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த மலையாள நடிகைகள் ஏராளம். அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் பிரியா வாரியர். இவர் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அவரை பேமஸ் ஆக்கியது அப்படத்தின் பாடல் தான். 2018-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் படத்தின்  ‘மாணிக்க மலராய’ என்கிற பாடல் வீடியோவில் பிரியா வாரியர் கண்ணடித்தது ரசிகர்களை கவர்ந்தது.

24
Priya Prakash Varrier wink

கண்ணடித்து பேமஸ் ஆன பிரியா வாரியர்

அவர் கண்ணடித்த கிளிப்பை மட்டும் கட் செய்து, அதை இணையத்தில் வைரல் ஆக்கினர். இதனால் ஸ்தம்பித்து போனது சோசியல் மீடியா. அதுமட்டுமின்றி யார்ரா இந்த பொண்ணு என நெட்டிசன்களும் கூகுளில் வலைவீசி தேட ஆரம்பித்தனர். இதனால் 2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்கிற பெருமையையும் பெற்றார் பிரியா வாரியர். அதுமட்டுமின்றி அந்த கண்ணடிக்கும் வீடியோ வைரலான பின்னர் இன்ஸ்டாவில் பிரியா வாரியரை பின் தொடர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்த ஒரே நடிகை என்கிற சாதனையையும் படைத்தார் பிரியா வாரியர்.

இதையும் படியுங்கள்... டிராகன் சாதனையை முறியடித்த ரெட் டிராகன்; பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி!

34
Priya Varrier

சரிவை சந்தித்த பிரியா வாரியர்

பிரியா வாரியர் கண்ணடித்த வீடியோ பேமஸ் ஆன அளவுக்கு கூட அவர் நடித்த முதல் படமான ஒரு அடார் லவ் பேமஸ் ஆகவில்லை. அப்படத்திற்கு பின் ஸ்ரீதேவி பங்களா என்கிற படத்தில் நடித்தார். அப்படம் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இதுதவிர தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்தும் பிரியா வாரியரால் சினிமாவில் நிலைக்க முடியவில்லை. இதனால் சில ஆண்டுகள் ஆள் அட்ரஸே தெரியாமல் இருந்தார் பிரியா வாரியர்.

44
Priya Varrier Dance in Good Bad Ugly

அடுத்த சிம்ரனாக மாறிய பிரியா வாரியர்

இதனிடையே அண்மையில் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடித்திருந்த பிரியா வாரியருக்கு அப்படம் கைகொடுக்காவிட்டாலும், அஜித்துடன் அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பேம்ஸ் ஆக்கியது. அன்று கண்ணழகால் டிரெண்டான் பிரியா, இன்று இடுப்பழகால் மறுபடியும் டிரெண்டிங் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு பிரியா வாரியர் நடனம் ஆடி உள்ளது அப்படத்தில் ஹைலைட்டான விஷயமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சிம்ரன் ரேஞ்சுக்கு பிரியா வாரியரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...அல்ட்ரா மாடர்ன் உடை.. அட்டகாச கவர்ச்சி - கண்ணடித்தே இளசுகளை கவர் செய்த பிரியா பிரகாஷ் வாரியர்! ஞாபகம் இருக்கா?

Read more Photos on
click me!

Recommended Stories