யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. அதிமுக கூட்டணிக்கு பா.ரஞ்சித் திடீர் ஆதரவு.. உ.பி.க்கள் ஷாக்!

Published : Mar 29, 2026, 10:43 PM IST

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.

PREV
13
ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் அவரது வீட்டு முன்பே கொலை செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கினார்.

அதிமுக கூட்டணியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

திமுக ஆட்சியில் தனது கணவரின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்து வந்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அவர் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

23
பா.ரஞ்சித் ஆதரவு

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும், அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.

33
இன்றியமையாத தருணம்

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.

நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்தும்; ஆதரவும்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories