ஓடிடியில் இந்த வாரம் அரை டஜன் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அக்டோபர் 31-ந் தேதி ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் ஓடிடியில் செம விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிரம்மாண்ட வெற்றிப் படங்களான லோகா சாப்டர் 1 மற்றும் காந்தாரா சாப்டர் 1 உள்பட ஏராளமான படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. அந்த வகையில் வருகிற அக்டோபர் 31ந் தேதி ஓடிடி தளங்களில் போட்டி போட்டு ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
29
இட்லி கடை
நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு திரைக்கு வந்த படம் இட்லி கடை. இப்படத்தை தனுஷே இயக்கியும் இருந்தார். அவர் இயக்கிய நான்காவது படம் இதுவாகும். திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட இப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.
39
பிளாக்மெயில்
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் பிளாக்மெயில். மாறன் இயக்கிய இப்படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
நவீன் டி கோபால் இயக்கத்தில் டிஜே அருணாச்சலம் ஹீரோவாக நடித்த படம் உசுரே. இப்படத்தில் கதாநாயகியாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடித்திருந்தார். இப்படம் அக்டோபர் 31ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
59
மரியா
ஹரி கே சுதன் இயக்கத்தில் சாய் ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில் உருவான படம் மரியா. த்ரில்லம் படமான இது தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. வருகிற அக்டோபர் 31-ந் தேதி முதல் சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
69
சொட்ட சொட்ட நனையுது
வழுக்கை தலை உள்ள ஹீரோவுக்கு கல்யாணமே கனவா இருக்க, விக் வச்சு கல்யாணம் பண்ணலாம்னு முயற்சி பண்றது தான் சொட்ட சொட்ட நனையுது படத்தின் கதைக்களம். இப்படம் அக்டோபர் 31ந் தேதி ஆஹா ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
79
கல்யாணம் டும் டும் டும் (வெப் சீரிஸ்)
பிரதீப் சரவணன் இயக்கத்தில் சின்னத்திரை சீரியல் நடிகர் சித்து நாயகனாக நடித்துள்ள வெப் தொடர் தான் கல்யாணம் டும் டும் டும். இந்த வெப் தொடரில் தீபு நாயகியாக நடித்துள்ளார். இது வருகிற அக்டோபர் 31ந் தேதி முதல் டெண்ட்கொட்டா ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
89
காந்தாரா சாப்டர் 1
ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் இந்த வாரம் ஓடிடிக்கு வந்துள்ளது. திரையரங்கில் 850 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வரும் இப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
99
லோகா சாப்டர் 1
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட சூப்பர் ஹீரோ திரைப்படம் தான் லோகா சாப்டர் 1 சந்திரா. இப்படத்தை டொமினிக் அருண் இயக்கி இருந்தார். இப்படம் அக்டோபர் 31-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ் பதிப்புடன் ரிலீஸ் ஆகிறது.