பிளாக்மெயில் செய்யும் கேடி சுதா... அடுத்த திருட்டுக்கு தயாராகும் கில்லாடி ரோகிணி..? சிறகடிக்க ஆசை அப்டேட்

Published : Oct 30, 2025, 10:18 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காவிட்டால், உன்னுடைய மாமியாரிடம் சொல்லிவிடுவேன் என ரோகிணியை ஸ்ருதியின் அம்மா சுதா பிளாக்மெயில் செய்துள்ளார்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் ரூமுக்குள் பாம்பு வந்ததை அடுத்து, அதை முத்து ஒரு பையில் பிடித்து வெளியே எடுத்துச் சென்றார். பாம்பை பார்த்ததும் வீட்டில் உள்ள அனைவருமே ஷாக் ஆகிப் போயினர். குறிப்பாக விஜயா மற்றும் மனோஜ் பேயடித்தது போல் ஆனார்கள். ரோகிணி கொண்டு வந்த பையில் இருந்து தான் பாம்பு வந்த விஷயம் தெரிந்ததும் ரோகிணியை திட்டிய விஜயா, மறுநாள் தன்னுடைய யோகா கிளாசுக்கு சென்றபோது அங்கு சிந்தாமணியிடம் தனது ரூமுக்குள் பாம்பு வந்த விஷயத்தை சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
சிந்தாமணியால் பதறிப்போன விஜயா

பாம்பு வந்தால் வீட்டிற்கு நல்லதல்ல என கூறும் சிந்தாமணி. இதுபோல் தனது உறவினரின் வீட்டுக்கு பாம்பு வந்த பின்னர், அவர்களின் வீடே எறிந்து நாசமானது என சொன்னதும் விஜயாவுக்கு பதற்றம் ஆகிறது. பின்னர் இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்யனுமா என சிந்தாமணியிடம் விஜயா கேட்க, அதற்கு அவர் நீங்க உங்க குல தெய்வம் கோவிலுக்கு சென்று வந்தாலே எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். இதையடுத்து வீட்டிற்கு செல்லும் விஜயா, அங்கு அனைவரிடமும் சிந்தாமணி சொன்ன விஷயத்தை பற்றி விவரிக்கிறார். அதற்கு முத்து, அந்த சிந்தாமணியே ஒரு பாம்பு, அவங்க சொன்னதெல்லாம் நம்புறீங்களா என பதிலடி கொடுக்கிறார்.

34
குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவு

உடனே அருகில் இருந்த அண்ணாமலை, நானும் என்னோட அம்மாகிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசினேன், அவங்களும் விஜயா சொன்னதுபோல் குலதெய்வம் கோவிலுக்கு வந்துட்டு போகச் சொன்னாங்க. அதனால் நாம் அனைவரும் ஒன்றாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று வருவோம் என சொல்கிறார். அதுமட்டுமின்றி தீபாவளியையும் அங்கு கொண்டாடிவிட்டு வருவோம் என கூறுகிறார். அனைவரும் சம்மதம் தெரிவிக்க, மனோஜ் மட்டும் முடியாது என கூறுகிறார். தீபாவளி வருவதால், ஷோரூமில் வியாபாரம் அதிகமாக இருக்கும். அதனால் தன்னால் வர முடியாது என சொல்கிறார் மனோஜ்.

44
ரோகிணிக்கு அடுத்த சிக்கல்

பின்னர் ரோகிணிக்கு ஒரு போன் கால் வருகிறது. அதை எடுத்து பேசும் ரோகிணியிடம் தன்னிடம் இருந்து வாங்கிய 2 லட்சத்தை உடனே திருப்பி தருமாறு ஸ்ருதியின் அம்மா சுதா கேட்கிறார். பணத்தை அப்படியே கொடுக்காம விட்றலாம்னு நினைக்கிறியா... நீ என்கிட்ட வாங்குன பணத்தை கொடுக்கலேனா உன்னோட மாமியாருக்கு போன் பண்ணி, நீ கடன் வாங்குன விஷயத்தை சொல்லிடுவேன் என பிளாக்மெயில் செய்கிறார் சுதா. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோகிணி, அடுத்த திருட்டுக்கு தயாராவது போல் தெரிகிறது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியலின் இனி வரும் எபிசோடுகளில் செம ட்விஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories