ஃபர்ஸ்ட்ல ரூ.500, இப்போ ரூ.1100ஐ ஆட்டைய போட்ட மாமனார் –பார்த்துவிட்ட மாப்பிள்ளை!

Published : Oct 29, 2025, 11:28 PM IST

Manickam stole 1100 Rupees in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாணிக்கம் முதலில் ரூ.500 எடுத்து நைசாக கிளம்பிய நிலையில் இப்போது ரூ.1100 எடுத்துக் கொண்டு சரவணனின் கண்ணில் சிக்கிக் கொண்டுள்ளார்.

PREV
14
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். கடந்த வாரம் முழுவதும் கோமதியின் அம்மா காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கோமதியின் அண்ணன்கள் கொண்டாடியதை விட கோமதியின் கணவர் பாண்டியன் ரொம்பவே பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

24
கள்ளாபெட்டியில் ஆட்டைய போட்ட மாணிக்கம்

அதோடு கதிரும் ஒருபடி மேல் சென்று அம்மாச்சியின் பிறந்தநாளில் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். மேள தாளம், போட்டோகிராஃபர், தாத்தாவின் புகைப்படம், அன்னதானம் என்று அனைவரையும் பிரமிக்க வைத்தனர். இதனால் காந்திமதி ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார். ஒருவழியாக பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. இதையடுத்து ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தனர்.

34
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு

வழக்கம் போல் பாண்டியன் தனது கடை வேலைகளை கவனித்து வந்தார். தங்கமயில், மாணிக்கமும் கடைக்கு வேலைக்கு வந்தனர். அப்போது 25 கிலோ அரிசிபையை வாடிக்கையாளர் பெற்றுச் சென்றார். ஆனால், அப்போது மாணிக்கம் தான் கள்ளாவில் இருந்தார். அவருக்கு 25 கிலோ அரிசியின் விலை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், வாடிக்கையாளர் எப்போது அந்த அரிசியை வாங்கிச் செல்வதால், தனக்கு இதனுடைய விலை எவ்வளவு என்று நன்கு தெரியும் என்றார்.

திடீரென்று ரேவதி அண்ட் கார்த்திக் ஒன்று சேர என்ன காரணம்? இயக்குநரின் மறைக்கப்பட்ட ரகசியம்!

44
ரூ.1100ஐ எடுத்த மாணிக்கம்

இதைத் தொடர்ந்து ரூ.1100 கொடுத்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து அந்த பணத்தை முதலில் கள்ளாவில் போட்டு அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பையில் வைத்துக் கொண்டார். ஆனால், இதனை சரவணன் பார்த்துவிட்டார். உடனே தங்கமயிலிடம் கேட்க, அவர் என்னுடைய அப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்று அப்படி இப்படி என்று வாக்குவாதம் செய்தார். அந்த நேரம் பார்த்து பாண்டியன் அங்கு வர அதோடு நேற்றைய காட்சிகள் முடிந்தன.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் நாகர்ஜூனாவின் ஹீரோயின்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories