திடீரென்று ரேவதி அண்ட் கார்த்திக் ஒன்று சேர என்ன காரணம்? இயக்குநரின் மறைக்கப்பட்ட ரகசியம்!

Published : Oct 29, 2025, 09:09 PM IST

Reason Behind Revathi and Karthik getting together : திருமணமாகி நீண்ட நாட்களுக்கு பிறகு ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
கார்த்திகை தீபம் 2

கார்த்திகை தீபம் 2 சீரியல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு இப்போது ஒருவர் மீது ஒருவர் அன்பு கடந்த காதல் வயப்பட்டு ரொமான்ஸ் செய்து வருகின்றனர். திருமணம் நடந்து கிட்டத்தட்ட 3, 4 மாதங்களுக்கு பிறகு இப்போது கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
கார்த்திகை தீபம் 2 சீரியல்

கார்த்திகை தீபம் 2 சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான காட்சிகளை வைத்து கார்த்திகை தீபம் 2 இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் சுவாதி, அதன் பிறகு ரேவதி, பின்னர் துர்கா என்று ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். அவர்களை எல்லாம் கார்த்திக் காப்பாற்றினார்.

இந்த நிலையில் தான் இப்போது கார்த்திக்கை தீர்த்து கட்ட காளியம்மாள், சிவனாண்டி, முத்துவேல், சந்திரகலா என்று ஒவ்வொருவரும் பிளான் போட்டனர். இதற்கான வாய்ப்பாக குடும்பத்தில் ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் தல தீபாவளி கொண்டாடினர். இதற்காக சாமுண்டீஸ்வரி மாப்பிள்ளைக்காக பட்டாசு வாங்கிக் கொண்டு வந்தார். இதில் மாபிள்ளை பட்டாசு என்று சொல்லக் கூடிய பட்டாசை கார்த்திக் தான் வெடிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.

37
மாப்பிள்ளை பட்டாசு

காளியம்மா திட்டப்படி புதிதாக ஒரு மாப்பிள்ளை பட்டாசு வாங்கி வந்து அதில் உள்ள மருந்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக நாட்டு வெடி குண்டு மருந்தை சிவனாண்டி வைத்துவிட்டார். மேலும், அந்த நாட்டு வெடி குண்டு வைத்த மாப்பிள்ளை பட்டாசை சந்திரகலாவின் உதவியுடன் முத்துவேல் சாமுண்டீஸ்வரியின் வீட்டில் வைத்துவிட்டு, பதிலுக்கு சாமுண்டீஸ்வரி வாங்கி வந்த பட்டாசை எடுத்துக் கொண்டு திரும்ப வந்துவிட்டார்.

Arundhathi Remake: அருந்ததி ரீமேக்; அனுஷ்கா இடத்தை பிடித்த 24 வயது இளம் நடிகை!

47
முத்துவேல்

அப்போது முத்துவேல் தனது அடையாளமாக தன்னை அறியாமல் தனது செயினை அங்கு தவறவிட்டுவிட்டார். இதுவரையில் அந்த செயின் யாருடைய கண்ணிலும் படவில்லை. இந்த நிலையில் தான் ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் ஒன்று சேர்ந்த பிறகு அந்த பட்டாசை தீபாவளிக்கு முந்தைய நாள் வெடிக்க ரேவதி ஆசைப்பட்டார். கார்த்திக்கும் பட்டாசு வெடிக்க தயாரான போது சாமுண்டிஸ்வரி எல்லோரது முன்னிலையிலும் வெடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார். 

நடிகை சௌந்தர்யாவை நினைத்து டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ரம்யா கிருஷ்ணன்!

57
சாமுண்டிஸ்வரி

கார்த்திக்கும் பட்டாசு வெடிக்க தயாரான போது சாமுண்டிஸ்வரி எல்லோரது முன்னிலையிலும் வெடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார். அதன்படியே ரேவதியும் அப்செட்டாக சென்றார். இந்த நிலையில் தான் தீபாவளி நாள் வந்தது. அனைவரும் புதிய உடை அணிந்து கொண்டு வந்தனர். இதில் மாமனார் வீட்டு சம்பிரதாயமாக பழம், பணம் வைத்து முதலில் மயில்வாகனம் மற்றும் ரோகிணி இருவரும் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சாமுண்டீஸ்வரியும் சரி, ராஜராஜனும் சரி நல்லா இருக்க என்று மட்டும் சொல்லிவிட்டனர்.

67
ரேவதி மற்றும் கார்த்திக்

இதே போன்று ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் காலில் விழுந்து ஆசி பெற்று அந்த தாம்பூல தட்டை பெற்றுக் கொண்டனர். அப்போது நீங்கள் நீண்ட ஆயுளுடன் எந்தவித நோய், நொடியுமின்றி மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஆசி வழங்கினர். இதன் மூலமாக ரேவதிக்கோ அல்லது கார்த்திக்கிற்கோ ஏதோ நடக்க போகிறது என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு பட்டாசு வெடிக்க தயாரானார்கள். இதில் அனைவரும் பட்டாசு போட்டு வெடித்த பிறகு கார்த்திக் அந்த மாப்பிள்ளை வெடியை வெடிக்க தயாரானார்.

77
சந்திரகலா

ஆனால், அவர் பற்ற வைப்பதற்கு முன்னதாக சந்திரகலா போன் வருகிறது என்று சொல்லி கொஞ்ச தூரம் நகர்ந்து சென்றார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்று என்ன நடக்கும் என்பது பற்றி ஒரு முன்னோட்டமாக பார்க்கலாம். அதாவது, கார்த்திக் பட்டாசை பற்ற வைத்தால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுவரையில் கார்த்திக் எந்த பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளவில்லை. அப்படியில்லை என்றால் ரேவதி பட்டாசை பற்ற வைத்தால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து திரும்ப வந்திருக்கிறார். ஆதலால், அவருக்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. மற்ற யாரேனும் வெடிப்பார்களா அல்லது வீட்டிற்குள் இருந்த செயின் பற்றி தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்ககலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories