எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மைகள் அனைத்தையும் ஜனனி சொன்னதை அடுத்து, மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், அஸ்வினை ஜனனி மற்றும் சக்தி சந்திக்க சென்ற விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரியவர, அவர், இருவரையும் கூப்பிட்டு விசாரிக்கிறார். அப்போது அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என ஜனனியிடம் ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு அந்த ரூமில் நடந்ததை நேரில் பார்த்தது போல் புட்டு புட்டு வைக்கிறார் ஜனனி. இதில் ஆடியன்ஸுக்கே சர்ப்ரைஸாக இருந்தது. எப்படி ஜனனிக்கு இது தெரிந்தது என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, அஸ்வின் கடைசியாக பைக்கில் செல்லும் போது போனில் அந்த வீடியோவில் என்ன இருந்தது என்கிற எல்லா உண்மையையும் ஜனனியிடம் சொல்லி இருக்கிறார். அதை தான் ஆதி குணசேகரனிடமும் சொல்லி இருக்கிறார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
குணசேகரனுக்கு சவால் விட்ட சக்தி
ஈஸ்வரிக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் நந்தினி, தர்ஷினி, பார்கவி என அனைவரிடமும் கூறும் ஜனனி, இந்த வாட்டி அவர் ஜெயிலுக்கு போன ஜென்மத்துக்கும் வெளியே வரக்கூடாது. அதை நாம் நடத்திக் காட்ட வேண்டும் என சபதமெடுக்கிறார். இதையடுத்து மறுநாள் காலையிலேயே கையில் பையுடன் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார் சக்தி. அப்போது கதிர் அவரை தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்ய, அப்போது ஆதி குணசேகரன் அருகே சென்று பேசும் சக்தி, நீங்க சொன்ன 15 நாளுக்குள்ள எல்லாவற்றிற்கு ஒரு முடிவு வரும். அது நீங்க எதிர்பாக்குற முடிவா... இல்லை உங்களுக்கு எதிரான முடிவா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க சொன்ன 15 நாளுக்குள்ள ஒரு கை பார்த்துடலாம் என கூறுகிறார் சக்தி.
34
வீட்டை விட்டு வெளியேறும் சக்தி
இப்போ நான் போய்தான் ஆகனும் அதற்கு என்ன சொல்ல வர்றீங்க என சக்தி கேட்க, அதற்கு குணசேகரன், போகனுமாப்பா, ஒரேயடியா போயிரு. வராத போயிரு என மிரட்டி அனுப்புகிறார். எதுக்கு அண்ணே அவன் போகனும்னு ஞானம் கேட்க, டேய் போகட்டும் விடுடா. ஒன்னு தொலைஞ்சதுனு நினைச்சுக்கோ. சின்ன வயசுல வாய் பேசமாட்டான் இவன். ஊமையா கிடந்தான். எப்படி பொழைக்க போறான்னு நினைச்சேன். இதுக்கெல்லாம் அவனோட பொண்டாட்டி தான் காரணம் என பொங்குகிறார் குணசேகரன். வீட்டை விட்டு வெளியே சென்ற சக்தியிடம் நந்தினி மற்றும் ரேணுகா சென்று பேசுகிறார்கள்.
நீ இப்போ போக வேணாம் என நந்தினி சொல்ல, அதற்கு பதிலளிக்கும் சக்தி, அண்ணி இவங்கெல்லாம் ஒரு மனுசனுங்க, இவங்க சொன்ன பேச்செல்லாம் கேட்டுட்டு பயந்து உட்காந்துட்டு இருக்க சொல்றீங்களா. இனி பொறுமையாக இருக்க முடியாது. நான் பாத்துக்குறேன். நீங்க பயப்படாதீங்க. அந்த ஆளு எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டாரு அண்ணி, என்னைய கொல்றதுக்கும், ஜனனியை கொல்றதுக்கும் தயாராகிட்டாரு. இதுக்கு மேல அமைதியா இருக்க முடியாது. அந்த ஆளோட ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டனும் அதற்கு நான் போய்தான் ஆகணும் என சொல்லிவிட்டு வீட்டை விட்டு இராமேஸ்வரத்துக்கு கிளம்புகிறார் சக்தி. இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.