கனவு பலிச்சிடுச்சு; வாழும் தெய்வத்தை பார்த்துட்டேன்! இளையராஜாவை பார்த்து பூரித்துபோன சூப்பர் சிங்கர் சரண் ராஜா

Published : Oct 28, 2025, 12:06 PM IST

விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 11 போட்டியாளரான சரண் ராஜாவின் நீண்ட நாள் கனவான இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் ஆசையை, கங்கை அமரன் நிறைவேற்றி வைத்துள்ளார்.

PREV
14
Super Singer Saran Raja meets Ilaiyaraaja

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று, இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடுவர்களாக உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், மிஷ்கின், தமன் ஆகியோர் உள்ளனர். இதில் ஒவ்வொரு நடுவர்களுக்கு தனித் தனியாக அணிகள் பிரிக்கப்பட்டு, அதில் சில போட்டியாளர்களும் உள்ளனர். அந்த வகையில் மிஷ்கின் அணியில் இடம்பெற்றிருக்கும் சரண்ராஜா இந்த சீசனின் முதல் எபிசோடில் இருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

24
சூப்பர் சிங்கர் சரண் ராஜா

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சரண் ராஜாவுக்கு, இசை மீது ஆர்வம் வர முக்கிய காரணமாக இருந்ததே இசைஞானி இளையராஜா தானாம். அவரின் பாடல்களைக் கேட்டு வளர்ந்த சரண் ராஜாவுக்கு, தன்னுடைய வாழ்நாளில் இசைஞானி இளையராஜாவை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்தபோது தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருந்தார் சரண் ராஜா.

34
இளையராஜாவை சந்தித்த சரண் ராஜா

அப்போது, தான் அப்பாயின்மெண்ட் வாங்கி இளையராஜாவிடம் உங்களை சந்திக்க வைக்கிறேன் என சரண் ராஜாவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார் கங்கை அமரன். அவர் சொன்னபடி தற்போது சரண் ராஜாவை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு வரவழைத்து, அவரின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். அவரை சஸ்பென்ஸாக இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் அழைத்து சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த ஸ்டூடியோவுக்குள் நுழையும் போதே, யப்போ என பிரம்மிப்புடன் எண்ட்ரி கொடுத்த சரண் ராஜாவை, வரவேற்ற கங்கை அமரன், அவரை ஸ்டூடியோ வாயிலில் நின்றபடி புகைப்படமும் எடுத்தார்.

44
வைரலாகும் போட்டோஸ்

உள்ளே இளையராஜாவை பார்க்க செல்லும் முன், ஐய்யாவை பார்த்து நான் மயக்கம் போட்டுட்டேனா என்னை எழுப்பி விட்றுங்க என சொல்லிக்கொண்டே உள்ளே சென்ற சரண் ராஜா, உள்ளே போனதும் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அவருடன் சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். பின்னர் தன் கனவு நிறைவேறிய உற்சாகத்துடன் வெளியே வந்த சரண் ராஜாவை அழைத்து உன்னுடைய கனவை நிறைவேற்றியாச்சு போ என கூறி இருக்கிறார் கங்கை அமரன். இந்த தருணம் பற்றி பேசி உள்ள சரண் ராஜா, வாழும் கடவுளை பார்த்துவிட்டேன் என உணர்ச்சி பொங்க பேசி உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories