சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவிடம் இருந்து பணத்தை எடுத்தது யார் என்கிற உண்மையை ஆட்டோ டிரைவர் கூறிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா வேலை பார்க்கும் மருத்துவமனையின் மேனேஜர், அவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்ய சொன்ன நிலையில், அந்த பணத்தை எடுத்துச் செல்லும் வழியில் சீதா சென்ற ஆட்டோவை வழிமறித்த கும்பல், அந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டது. இதனால் கண்ணீர்விட்டு அழுத்த சீதாவை, வேலையை விட்டு தூக்குவதாக மேனேஜர் மிரட்ட, அப்போது கடவுள் போல் வந்த முத்து, அந்த பணத்தை மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக கொடுத்து, சீதாவின் வேலையை காப்பாற்றினார். ஆனால் அந்த பணத்தை எடுத்தது யார் என்கிற உண்மையை முத்து சொல்லவே இல்லை.
24
மீண்டும் சீதாவுக்கு வந்த வேலை
இந்த நிலையில், இன்றைய எபிசோடில், சீதாவிடம் மீண்டும் 5 லட்சம் பணத்தை கொடுத்து பேங்கில் டெபாசிட் செய்து வர சொல்கிறார் மேனேஜர். அதை வாங்க மறுக்கும் சீதா, ஏற்கனவே நான் ஒருமுறை பட்டதே போதும் இதை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு கூறுகிறார். ஒருமுறை நடந்ததற்கு என்ன பண்ணுவது, நீ பயப்படாம கொண்டுபோ என கொடுக்கிறார். சீதாவும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு, செக்யூரிட்டி உதவியுடன் ஆட்டோவில் பேங்குக்கு கிளம்புகிறார். அந்த ஆட்டோ டிரைவரிடம் வழியில் எங்குமே நிறுத்தாமல் செல்லுமாறும் சீதா கூறுகிறார்.
34
சீதாவிடம் உண்மையை கூறிய ஆட்டோ டிரைவர்
ஆனால் செல்லும் வழியில் சீதாவின் மாமா முத்துவை பார்த்த அந்த ஆட்டோ டிரைவர், ஆட்டோவை நிறுத்திவிட்டு, அவரிடம் பேசிவிட்டு வருவதாக கூறிச் செல்கிறார். ரொம்ப நேரம் ஆகியும் ஆட்டோ டிரைவர் வராததால், சீதா அவரைத் தேடிச் செல்ல, அப்போது முத்துவும் அவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே சென்று, அந்த ஆட்டோ டிரைவரிடம், அண்ணா டைம் ஆகிக் கொண்டு இருக்கிறது. இங்க ஏன் இவர்கிட்ட தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க என சொல்ல, அப்போது, தான் பணத்தை திருடிய விஷயத்தை சீதாவிடம் கூறும் ஆட்டோ டிரைவர், தன்னையும் சிக்க வைக்காமல், அந்த பணத்தை போலீஸிடம் ஒப்படைத்தது முத்து தான் என கூறுகிறார்.
சீதாவுக்கு தெரியாமல் இத்தனை நாட்களாக முத்து மூடி மறைத்த உண்மையை அந்த ஆட்டோ டிரைவர் போட்டுடைத்ததால், தனக்காக மாமா இவ்வளவு உதவி செய்திருக்கிறாரா என ஃபீல் பண்ணுவதோடு, அந்த இடத்திலேயே முத்துவிடம் மன்னிப்பும் கேட்கிறார். பின்னர் தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்லும் சீதா, அங்கு இருந்த மீனாவை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார். மகள்கள் சண்டைபோட்டதால் சோகத்தில் இருந்த சந்திரா, அவர்கள் மீண்டும் சேர்ந்ததை பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.