சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிப்பார்கள். ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியிடப்படும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 41வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகை வந்ததால், டிஆர்பி விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக இன்றைய தினம் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் எந்தெந்த சீரியல்கள் டாப் 10 இடத்தை பிடித்திருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
24
டாப் 10 தமிழ் சீரியல்கள்
கடந்த வாரம் 11வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 6.46 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் புத்தம் புது டப்பிங் சீரியலான ஹனுமன் 9-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 10ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் ஒரு இடம் முன்னேறி 6.54 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.51 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது.
34
சிறகடிக்க ஆசை சீரியலுக்கு விழுந்த அடி
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலான சிறகடிக்க ஆசை, கடந்த மாதம் வரை டாப் 4 பட்டியலில் இருந்து வந்த நிலையில், இந்த வாரம் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு 7.75 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதையடுத்து கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் மளமளவென முன்னேறி 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 7.98 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை கேப்ரியல்லா நடித்த மருமகள் சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 6ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி, 8.07 புள்ளிகளுடன் 5-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
வழக்கம் போல் முதல் நான்கு இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் கெத்தாக இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் மளமளவென பின்னுக்கு தள்ளப்பட்டு 8.55 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் பிக் அப் ஆகி 8.99 புள்ளிகள் உடன் 3-ம் இடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களாக முதலிடத்தை பிடித்து வந்த மூன்று முடிச்சு சீரியல், இந்த வாரம் 9.34 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல், இந்த வாரம் விறுவிறுவென முன்னேறி மீண்டும் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 9.57 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.