சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை... இனி இவருக்கு பதில் இவரா?

Published : Oct 27, 2025, 01:18 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வந்த நடிகை ஒருவர் திடீரென அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதில் நடிக்கும் நடிகை யார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Actress Quit Singappenne Serial

சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிங்கப்பெண்ணே. இந்த சீரியலில் மனிஷா மகேஷ் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமல்ஜித் என்பவர் நடித்து வருகிறார். மேலும் தர்ஷக் கெளடா, விஜே பவித்ரா, ஞானசம்பந்தன், ரமா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வந்த இந்த சீரியலில் அன்புவும், ஆனந்தியும் எப்போ சேருவார்கள் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த வாரம் விடை கிடைத்தது. அன்பு சர்ப்ரைஸாக ஆனந்தி கழுத்தில் தாலி கட்டி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

24
சிங்கப்பெண்ணே சீரியலில் அதிரடி மாற்றம்

இருப்பினும் ஆனந்தி தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிக்காமல் திண்டாடிக் கொண்டு இருக்கும் வேளையில் அன்பு தன் கழுத்தில் தாலி கட்டியதை சுத்தமாக விரும்பவில்லை. மேலும் அவரை பிரிந்தே வாழ்ந்து வருகிறார். அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்பான கதைக்களத்துடன் சிங்கப்பெண்ணே சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த மாதம் வரை டிஆர்பி ரேஸில் முதலிடத்தில் இருந்து வந்த சிங்கப்பெண்ணே சீரியல், இம்மாதத்தில் இருந்து கடும் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

34
விலகிய நிவேதா ரவி

இந்த நிலையில், சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து நடிகை ஒருவர் திடீரென விலகி இருக்கிறார். சிங்கப்பெண்ணே தொடரில் ஆனந்தியின் அக்காவான கோகிலா கேரக்டரில் நடித்து வந்தவர் தான் நிவேதா ரவி, இவரது கல்யாணத்தின் போது தான் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் எல்லாருக்கும் தெரியவந்தது. அதனால் அவரின் வாழ்க்கையும் கேள்விக் குறி ஆனது. தன் தங்கைக்கு நீதி கிடைப்பதற்காக கணவரை பிரிந்து ஆனந்தி உடன் தான் கோகிலா வசித்து வரும்படியான கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நிவேதா ரவி திடீரென சீரியலை விட்டு விலகி உள்ளார்.

44
அடுத்த கோகிலா இவரா?

நிவேதா ரவி விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக சிந்துஜா என்பவர் கோகிலா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். நாளைய எபிசோடில் இருந்து கோகிலாவாக சிந்துஜா நடித்துள்ள காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. நிவேதா ரவி கோகிலா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். அவர் விலகியதால் அந்த இடத்தை சிந்துஜா தன்னுடைய இயல்பான நடிப்பால் கைப்பற்றுவாரா என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories