எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனிடம் டீல் பேச அவரது வீட்டிற்கே எண்ட்ரி கொடுத்துள்ளார் புது வில்லன். அவர் யார்?... எதற்காக வந்துள்ளார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட, வீட்டை விட்டு வெளியேறும் சக்தி, இராமேஸ்வரத்துக்கு கிளம்பி சென்றிருக்கிறார். அவரை வெளியே போக விடாமல் தடுத்த கதிர், பின்னர் ஆதி குணசேகரன் சொன்னதும் விலகுகிறார். அவனை எதற்காக தடுத்தீர்கள் என்று நந்தினி கேட்க, அதற்கு அவர், நான் சின்ன வயசுல இருந்து என் தோள்ல போட்டு வளர்த்த பையன் அவன், அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா நான் தான பொறுப்பாக முடியும். அதனால் தான் கேட்டேன் என சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் நடந்த தரமான சம்பவம் என்ன என்பதை பார்க்கலாம்.
25
குழப்பத்தில் ஜனனி
மாடியில் ஜனனி, நந்தினி, தர்ஷன், பார்கவி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், அஸ்வினை கொன்றது யார் என தெரியவில்லை என ஜனனி சொல்ல, அதற்கு நந்தினி, அந்த அறிவுக்கரசியே யாராவது ஆள்வச்சு அந்த பையனை கொன்னுட்டு வீடியோ எடுத்துட்டு போயிருக்கலாம் என சொல்ல, அதற்கு ஜனனி, அஸ்வின், அவனை துரத்தி வந்தது ஏதோ புது குரூப்னு சொன்னான். அது யார் குரூப்னு அவனுக்கு எப்படி தெரியும் என நந்தினி கேட்க, ஜனனிக்கு குழப்பம் ஆகிறது. இந்த நேரத்தில் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வந்த ஆதி குணசேகரனிடம் சாமி என்ன சொன்னாரு என கரிகாலன் கேட்கிறார்.
35
அடிச்சு நொறுக்கப் போவதாக சீரும் குணசேகரன்
அதற்கு ஆதி குணசேகரன், எல்லாத்தையும் அடிச்சு நொறுக்க சொல்லிருக்காரு என கூறுகிறார். இதையடுத்து வீட்டுக்குள் ஒரு சொகுசு கார் வருகிறது. அதிலிருந்து இறங்கும் கோர்ட் சூட் போட்ட நபர், அதில் அமர்ந்திருக்கும் தன்னுடைய பாஸிடம் முதலில் நான் உள்ளே சென்று பேசுகிறேன் என சொல்லிச் செல்கிறார். அவரைப் பார்த்ததும், தர்ஷினி ஃபுட் ட்ரக் தொடங்குவது குறித்து பேச வந்திருப்பார் என கரிகாலன் சொல்லிக் கொண்டிருக்க, தான் குணசேகரனை பார்க்க வந்திருப்பதாக அந்த நபர் சொல்கிறார். இதையடுத்து அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார் கரிகாலன்.
அவரைப் பார்த்ததும், உன்னை முன்ன பின்ன பார்த்த மாதிரியே இல்லையேப்பா என ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு அந்த நபர், நான் தற்போது தான் உங்களை முதன்முறை பார்க்கிறேன். இனிமேல் அடிக்கடி சந்திப்போம் என நினைக்கிறேன் என சொல்கிறார். என்ன விஷயமாக இங்கே வந்திருக்கீங்க என ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு அவர், இந்த வீடு உங்க பெயரில் தானே இருக்கிறது என கேள்வி எழுப்புகிறார். முதலில் யார் நீ? என்ன விஷயமா வந்திருக்கனு குணசேகரன் கேட்கிறார். உடனே அவர் தன்னுடைய விசிடிங் கார்டை எடுத்து, தான் குளோபல் லெவல் கம்பெனியில் மேனேஜராக இருப்பதாக சொல்கிறார்.
55
முதல் சந்திப்பிலேயே நடக்கும் டீலிங்
இந்த ஏரியாவில் ஒரு ஹெரிடேஜ் ஹோட்டல் கட்டலாம் என பிளான் பண்ணிக் கொண்டு இருப்பதாகவும், அதுதொடர்பாக பேச தான் வந்திருக்கிறேன் என கூறுகிறார். ஹோட்டல் கட்ட, இந்த ஏரியாவில் உள்ள எல்லா வீடையும் கைப்பற்றிவிட்டோம். நீங்க மட்டும் தான் பாக்கி. அதான் உங்க கிட்டயும் பேசி ஓகே பண்ணலாம்னு வந்திருப்பதாக சொல்கிறார். புரியலையே... கொஞ்சம் தெளிவா சொல்லு என குணசேகரன் கேட்க, அதற்கு அவர், சார் உங்க வீடு மொத்தம் 8 கிரவுண்டு, அதற்கு நீங்க என்ன ரேட் எதிர்பார்க்கிறீர்களோ, இன்றைய மார்க்கெட் ரேட்டைவிட 30 சதவீதம் அதிகமாக கொடுக்கிறோம் என டீல் பேசுகிறார்.
இதைக்கேட்ட அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து காரில் உள்ள புது வில்லன் வர உள்ளதால், இனி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த வில்லனிடம் தான் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ உள்ளது. அதனால் அதை வைத்து குணசேகரனை அவர் பிளாக்மெயில் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.