பாகுபலி புகழ் இசையமைப்பாளர் கீரவாணி, நாட்டு கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்காமல் இருந்திருந்தால், அவரை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். டோலிவுட் தெலுங்கில் கீரவாணியாக இருக்கும் இவர் கோலிவுட் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளர் மரகதமணி ஆவார். பழம்பெரும் இயக்குனர் கே .பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்.