உங்க வெற்றியின் சீக்ரெட் என்ன? ஓப்பனா கேட்ட ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுத்த அந்த நடிகர் யார் தெரியுமா?

First Published | Nov 22, 2023, 1:35 PM IST

ரஜினிகாந்த் ஒருமுறை பிரபல நடிகர் ஒருவரின் வெற்றியின் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்தாராம்.

Super Star Rajinikanth

தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையில் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினியின் படங்களுக்கு இன்றளவுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான ஜெயிலர் படமே மிகப்பெரிய உதாரணம்.

Rajinikanth

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராக ரஜினிகாந்த் கருதப்படுகிறார். இப்படம் 23 நாட்களில் 640 கோடி ரூபாய் வசூல் செய்து பல்வேறு சாதனைகளை முறியடித்தது. இப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த 2-வது தமிழ் படமாகும்.

Tap to resize

எனவே புதிய சாதனைகளை படைப்பதோ அல்லது ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடிப்பதோ நடிகர் ரஜினிக்கும் ஒன்றும் புதிதல்ல. இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். ஆனால் இன்றளவும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ஒரு காலமும் இருந்தது.

தொடர் தோல்வியால் துவண்டு போன ரஜினிகாந்த் ஒருமுறை பிரபல நடிகர் ஒருவரின் வெற்றியின் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்தாராம். அப்படி ரஜினிகாந்திற்கே டஃப் கொடுத்த நடிகர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை. 80களில் கொடிகட்டி பறந்த நடிகர் மோகன் தானாம்.

Mic Mohan

அப்போது ஒருமுறை மோகனை தொடர்புகொண்ட நடிகர் ரஜினி, உங்கள் படம் சூப்பர்ஹிட் ஆவதற்கு என்ன காரணம் என்று கேட்டாராம். அதற்கு பதிலளித்த மோகன் தனது படங்களுக்கு எப்போது குடும்பப்பாங்கான கதைகளையே தேர்வு செய்ததாக கூறினாராம். நடிகர் மோகனே இந்த தகவலை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Mohan re entry

ரஜினியும் கமலும் உச்ச நடிகர்களாக மாறிவந்த 80களில் மோகன் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்தார் என்றே சொல்ல வேண்டும். மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட அவரின் எல்லா படங்களும் சிகர்களால் கொண்டாடப்பட்டன. அவரின் பயணங்கள் முடிவதில்லை படம் 500 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. மேலும் மோகன் நடித்த 20க்கும் மேற்பட்ட படங்கள் 200 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இதனால் வெள்ளிவிழா நாயகன் என்று மோகன் அழைக்கப்பட்டார். எனினும் 1991-க்கு பிறகு மோகன் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 

mic mohana

1999-ம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கி நடித்திருந்த அவர் சினிமாவில் இடைவெளி எடுத்தார். பின்னர் அவர் 2008-ம் ஆண்டு சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்தார். 2016-ம் ஆண்டு அபயிதோ அம்மாயி என்ற தெலுங்கு படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது ஹரா என்ற தமிழ் படத்திலும், தளபதி 68 படத்திலும் மோகன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!