விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஈரமான ரோஜாவே சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் முதலாவது சீசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் திரவியம் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பவித்ரா நடித்த இந்த சீரியல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெற்றிநடைபோட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் முடிவுக்கு வந்தது.
24
eeramana rojave 2
இதையடுத்து அந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதிலும் திரவியம் ஹீரோவாக நடித்திருந்தாலும், ஹீரோயின் மாற்றப்பட்டு, புது கதைக் களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது. விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக டிஆர்பி-யை பெற்ற சீரியலாகவும் ஈரமான ரோஜாவே 2 இருந்து வந்தது. இந்த சீரியலில் சுவாதி கொண்டே மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இந்த நிலையில், இந்த சீரியலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த சீரியலை இயக்கிய தாய் செல்வம் மரணமடைந்த பின்னர் ராஜா சுந்தரம் என்பவர் தான் இந்த சீரியலை இயக்கி வந்த நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சுவாதி கொண்டே போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தான் இந்த சீரியல் முடிய உள்ளதா என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.
44
Swathi Konde insta post
ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி கொண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் முடிய போகிறதா என்கிற கேள்வி உடன் கண் கலங்கியபடி சோகமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஈரமான ரோஜாவே 2 சீரியல் முடிய உள்ளதை தான் அவர் இப்படி சூசகமாக சொல்லி உள்ளதாக கூறி வருகின்றனர்.