Karthigai deepam
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரூபஸ்ரீயை சிக்க வைத்து பல்லவியை கண்டுபிடிக்க பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் இளையராஜாவிடம் எப்படியாவது ரூபாஸ்ரீயை பாட்டு பாட ஒப்பு கொள்ள வைக்க வேண்டும் என்று சொல்லி அவளை சந்திக்க முகவரி கொடுத்து அனுப்புகிறான், அடுத்து ரூபாஸ்ரீ வீட்டிற்கு வரும் இளையராஜா இந்த நிகழ்ச்சி குறித்து சொல்ல கோகிலா அவங்க அம்மா ராஜஸ்ரீ கிட்ட கேட்டு தான் முடிவை சொல்ல முடியும் என தனியாக சென்று தீபாவுக்கு போன் போடுகிறாள்.
Karthigai deepam serial
இங்கே இளையராஜா கார்த்திக்கு போன் செய்து அவங்க யார்கிட்டயோ கேட்டு தான் சொல்ல முடியும்னு சொல்றாங்க என்று நடந்தவற்றை சொல்கிறான். தீபா, கார்த்தி பக்கத்தில் இருந்ததால் கோகிலாவின் போனை எடுக்க முடியாமல் போகிறது, இந்த சமயத்தில் இந்த கச்சேரியில் பாடினால் சம்பளம் 10 லட்சம் ருபாய் என்று கேட்க, கோகிலா பண ஆசையில் இதுக்கு ஓகே சொல்லி ரூபாஸ்ரீயை அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட வைத்து விடுகிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
zee tamil Karthigai deepam serial
பணமும் வாங்கிட்டு அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டுட்டு பாட வரலைனா பெரிய பிரச்னையாகிடும் என வார்னிங் கொடுத்து விட்டு இளையாராஜா கிளம்பியதும் தீபா கோகிலாவுக்கு போன் செய்து இதெல்லாம் கார்த்தியின் பிளான் என்று சொல்கிறாள். ஆனால் கோகிலா அதை நம்ப மறுக்கிறாள். அதே சமயம் நீ இந்த கச்சேரியில் பாடியே ஆக வேண்டும் எனவும் ஷாக் கொடுக்கிறாள்.