தோழிகள் சொன்ன வார்த்தை.. வாய் கொடுத்து ஷண்முகத்திடம் சிக்கிய பரணி - அண்ணா சீரியல் அப்டேட்

First Published | Nov 21, 2023, 7:41 PM IST

மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் பரணி தனது தோழிகளிடம் சிக்க, ஷண்முகம் தான் தன்னுடைய புருஷன் என்று ஒப்பு கொண்டாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரணி ஷண்முகம் தான் தன்னுடைய புருஷன் என்று சொன்னதும் தோழிகள் எல்லாரும் இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்லி விட்டு செல்ல, பரணி ஷாக் ஆகிறாள், ஷண்முகம் தான் இதனை சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்து அவனை ரூமுக்கு கூப்பிட்டு சண்டை போட, ஷண்முகம் நான் சொல்லல, அத்தை தான் சொன்னாங்க என்று சொல்லியும் பரணி நம்ப மறுக்கிறாள். 

zee tamil Anna serial

மறுபக்கம் பாக்கியம் பரணிக்கு தீபாவளி சீர் செய்ய முடியாமல் போய்டுமோ என்று வருத்தத்தோடு இருக்க, சிவபாலன் இதை நான் பார்த்துக்கறேன். முத்துபாண்டியை வைத்து எப்படி ஏற்பாடு பன்றேன்னு பாருமா என்று சொல்கிறான். அதன் பிறகு முத்துப்பாண்டி வந்ததும் ஷூக்கு பாலிஷ் போட்டு கொண்டே, நீ என்னை விட அழகா ஸ்மார்ட்டா தான் இருக்க, ஆனால் உன்னை ஏன் ரத்னாவுக்கு பிடிக்கலனு நீ யோசிச்சியா என்று பேச தொடங்குகிறான் சிவபாலன். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Anna serial update

இன்னைக்கு நான் வெளியே போகும் போது இசக்கி ரேஷன் கடையில் நின்னுட்டு இருந்தா, நான் உடனே அங்க போய் அவளுக்காக லைன்ல நின்னு பொருள் வாங்கி வீட்டில் கொண்டு போய் குடுத்துட்டு வந்தேன், இந்த மாதிரி செய்தால் பெண்களுக்கு உன்னை பிடிக்கும் என்று சொல்ல முத்துப்பாண்டி பெல்ட்டை எடுத்து சிவபாலனை விரட்டி விரட்டி அடிக்க, அவன் தப்பி ஓடி சௌந்தரபாண்டி மீது இடித்து விடுகிறான். 

உடனே அவர் என்னடா ஆச்சு என்று கேட்க என்னை போய் அந்த ரத்னாவுக்கு முறை வாசல் பார்க்க சொல்றார் என்று சொல்ல, சௌந்தரபாண்டி உனக்கும் இசக்கிக்கும் கல்யாணமும் நடக்காது, பரணிக்கு தீபாவளி சீரும் செய்ய முடியாது என்று சொல்ல பாக்கியம் சோகம் அடைகிறாள். 

Anna serial today episode

மறுபக்கம் ஷண்முகம் வீட்டிற்கு வந்த பரணியின் தோழிகள், தனது தங்கைகள் என எல்லாருக்கும் டிரஸ் எடுத்து வந்து கொடுக்க கனி பரணி அண்ணிக்கு எடுக்கலயா? என்று கேட்க, எடுத்து கொடுத்தா மட்டும் கட்டிக்கவா போறாங்க? அதான் எடுக்கல என்று சொல்ல, பரணி அதை நீ முடிவு பண்ண கூடாது, எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு பார்த்து இருக்கனும். நீ எடுத்து வந்து கொடுத்திருந்தா கட்டி இருப்பேன் என்று சொல்ல, ஷண்முகம் விசில் அடிக்க வெட்டுக்கிளி பரணிக்கு எடுத்த துணியுடன் உள்ளே என்ட்ரி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... அக்ரீமெண்ட்டில் கையெழுத்திட்ட ரூபஸ்ரீ.. கார்த்தியின் மாஸ்டர் பிளானில் சிக்கியது யார்? கார்த்திகை தீபம் சீரியல்

Latest Videos

click me!