சமீபத்தில் வெளியான ஆர்ஆர் மூலம் தெலுங்கில் மட்டும் இல்லாத தமிழ், மலையாளம், கன்னடம் என பிற மொழி ரசிகர்களையும் வென்றெடுத்தவர் நடிகர் என் டி ஆர். தெலுங்கில் முன்னணி நாயகனாக திகழ்ந்து வரும் இவர் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என் டி ராமா ராவின் பேரன் ஆவார். இவரும் பிரபல நடிகராக இருந்தவர். வாரிசு நடிகராக டோலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது டாப் டென் நடிகர்களில் முதல் வரிசையில் உள்ளார்.
25
NTR
கடந்த 2011 ஆம் ஆண்டு லட்சுமி பிரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என் டி ஆர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். என்.டி.ஆரின் தந்தை பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவும் பிரபல நடிகராவார். இந்தியா அளவில் பிரபலமான நடிகர்களில் முதலிடத்தை பெற்ற என் டி ஆர் தற்போது தனக்கு சொந்தமாக மிகப்பெரிய பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.
சமீபகாலமாக பங்களா கலாச்சாரம் மேலோங்கியுள்ளது. புறநகரங்களில் தங்களுக்கென பிரமாண்ட பண்ணனை வீட்டை கட்டிக்கொள்வதை பிரபலங்கள் பலரும் வழக்காமாக கொண்டுள்ளனர். அந்த வரிசையில் கடந்த ஆண்டு 6.5 ஏக்கர் பரப்பளவில் இடத்தை வாங்கிய என்டிஆர் அதில் மிக அழகிய பண்ணை வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
மனைவியின் பிறந்தநாள் பரிசாக இதை அளித்திருந்தார். என்டிஆர் அந்த பெண்ணை வீட்டில் நெருங்கிய குடும்ப நண்பர்களுக்கு பார்ட்டியும் நடத்தினார். அதோடு இந்த வீட்டிற்கு பிருந்தாவனம் என பெயர் சூட்டியுள்ளார். தோட்டங்கள் மற்றும் பசுமை நிறைந்த பகுதிகள் என கண்கவரும் பண்ணை வீட்டிற்கு என் டி ஆர் நடித்த தான் நடித்த "பிருந்தாவனம்" படத்தின் நினைவாக பெயரிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை வம்சி பைடி பள்ளி இயக்கியிருந்தார். தற்போது இயக்குனர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் "வாரிசு" படத்தை இயக்கி வருகிறார். தற்போது நடிகர் என் டி ஆர் எஸ் எஸ் ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் ஆர்ஆர்ஆரைத் தொடர்ந்து தனது முப்பதாவது படத்திற்காக கொரட்டாலா சிவா உடன் இணைந்துள்ளார். முன்னதாக இருவரும் ஜனதா கேரேஜ் என்னும் படத்தை வழங்கினார்கள். இந்த வெற்றி படத்தை அடுத்த மீண்டும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.