வேள்பாரியில் இருந்து விலகிவிட்டாரா யஷ்? 2 டாப் கோலிவுட் ஹீரோக்களுக்கு வலைவீசும் ஷங்கர்!

Published : Sep 26, 2024, 12:42 PM IST

ஷங்கர் இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாக உள்ள வேள்பாரி படத்தில் நடிக்க 2 முன்னணி தமிழ் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

PREV
15
வேள்பாரியில் இருந்து விலகிவிட்டாரா யஷ்? 2 டாப் கோலிவுட் ஹீரோக்களுக்கு வலைவீசும் ஷங்கர்!
Velpari

ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். இதையடுத்து அவர் இயக்கிய காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் பிரம்மாண்ட வெற்றிய ருசித்தன. இதனால் கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்தார் ஷங்கர். அவர் இயக்கத்தில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. சுமார் ஆறு வருட கடின உழைப்புக்கு பின் அப்படம் திரைக்கு வந்தது.

25
Shankar, Su venkatesan

இருப்பினும் விறுவிறுப்பில்லாத திரைக்கதையால் இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பின் அதன் மூன்றாம் பாகத்தை வெளியிடுவதும் கேள்விக்குறி ஆகி உள்ளது. இதுதவிர இயக்குனர் ஷங்கர் கைவசம் கேம் சேஞ்சர் என்கிற தெலுங்கு படமும் உள்ளது. அப்படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. மறுபுறம் தமிழிலும் தரமான கம்பேக் கொடுக்க முடிவெடுத்துள்ளார் ஷங்கர்.

35
Yash quit velpari

அதன்படி சு வெங்கடேஷனின் வேள்பாரி நாவலை தற்போது படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் ஷங்கர். இதை அண்மையில் அவரே உறுதிப்படுத்தினார். சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் டிரைலரில் வேள்பாரி நாவலில் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும், அதை படமாக்கும் முயற்சியில் உள்ள தனக்கு அது மிகுந்த அதிர்ச்சியை தந்ததாகவும் கூறி இருந்தார். இதன்மூலம் ஷங்கரின் அடுத்த தமிழ் படம் வேள்பாரி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... என் மகன்களுக்கு ஆர்த்தி பற்றி தெரியக்கூடாது; மாமியார் கொடுமைக்காரி.. ஜெயம் ரவி கூறியதை பகிர்ந்த பயில்வான்!

45
Suriya, Shankar

முதலில் இதில் கேஜிஎப் நாயகன் யஷ்ஷை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் ஷங்கர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது யஷ்ஷுக்கு பதிலாக இரண்டு கோலிவுட் நடிகர்களை வைத்து வேள்பாரியை படமாக்க ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இதுதொடர்பாக நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைக்க உள்ளாராம்.

55
Suriya, Vikram

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஏற்கனவே அந்நியன், ஐ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சூர்யா அவர் இயக்கத்தில் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இதனால் ஷங்கரின் தரமான கம்பேக் படமாக வேள்பாரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக திகழும் நடிகர் பிரபாஸ்! இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories