அஜித் நடிப்பில் விரைவில் தொடங்க உள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், இப்படம் குறித்த அப்டேட்டுகளை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் லிஸ்ட் போட்டு சொல்லி இருக்கிறார்.
அதன்படி விடாமுயற்சி படத்தின் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என கூறியுள்ள அவர், இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கும் முன் இயக்குனருக்கு முக்கிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். அது என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் வெளிநாட்டிலேயே நடத்த வேண்டும் என ஸ்டிரிக்ட் ஆக அஜித் சொல்லி உள்ளதாக செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது அவருக்கு பதில் நடிகை தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் செய்யாறு பாலு கூறி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட உள்ளதாம். முடிந்தவரை பொங்கலுக்கு இப்படத்தை திரைக்கு கொண்டுவரும் ஐடியாவில் உள்ளதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.