லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அனுராக் கஷ்யப், சஞ்சய் தத், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் என மிகப்பெரிய நடசத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் பிசினஸும் ரிலீஸுக்கு முன்பே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக லியோ படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். இப்படி லியோ பட வேலைகள் ஒருபக்கம் பரபரப்பாக நடக்க கேரளாவில் இருந்து ஒரு ஹாட் அப்டேட் வந்துள்ளது.
இதையும் படியுங்கள்... DD returns review : சந்தானம் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா? டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ
leo
நடிகர் விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் நாட்டில் விஜய் படத்துக்கு எந்த அளவுக்கு மவுசு இருக்குமோ அதே அளவு மவுசு கேரளாவிலும் இருக்கும். இதன்காரணமாகவே விஜய் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட மாட்டார். இப்படி விஜய்யின் கோட்டையாக திகழ்ந்து வரும் கேரளாவில் லியோ படத்தை கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
இதுவரை இல்லாத அளவு செம்ம மாஸ் ஆக லியோ படத்தை ரிலீஸ் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம். அதனால் லியோ படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளில் மட்டும் கேரளாவில் 3 ஆயிரம் ஷோக்கள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் மட்டும் மொத்தம் 650 தியேட்டர்களில் லியோ திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். இப்படி தமிழ்நாட்டுக்கு இணையாக கேரளாவில் லியோ படம் ரிலீஸ் ஆக உள்ளதால், இந்த ஆண்டு அங்கு அதிகம் வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையை லியோ நிச்சயம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... திடீரென இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா கிளம்பும் ரஜினிகாந்த்; அதுவும் இத்தனை நாளா - பின்னணி என்ன?