நடிகை ஷோபனா வீட்டில் பணத்தை அபேஸ் செய்த வேலைக்கார பெண்... சிக்க வைத்த Gpay - பின்னணி என்ன?

First Published | Jul 28, 2023, 10:31 AM IST

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருடிய பணிப்பெண் Gpay மூலம் சிக்கியதன் ஷாக்கிங் பின்னணியை பற்றி பார்க்கலாம்.

Shobana

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷோபனா. பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்கும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை ஷோபனாவுக்கு தற்போது 53 வயது ஆன போதிலும் அவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாவே வாழ்ந்து வருகிறார்.

Shobana

நடிகை ஷோபனாவின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இரண்டடுக்கு கொண்ட மாடி வீட்டில் நடிகை ஷோபனா இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தில் அவரது தயாரும், தரை தளத்தில் ஷோபனாவின் நடனப் பள்ளியும் இயங்கி வருகிறது. ஷோபனாவின் தாயாரை கவனித்துக் கொள்ள கடலூரை சேர்ந்த விஜயா என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர் ஷோபனா வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 5 மாசம் படுத்த படுக்கையா இருந்தேன்... மீண்டு வந்தது எப்படி? - சீக்ரெட் சொன்ன ரோபோ சங்கர்

Tap to resize

Shobana

இந்த நிலையில், முதல் தளத்தில் வசிக்கும் ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் வீட்டில் வேலை செய்யும் விஜயா மீது சந்தேகப்பட்ட ஷோபனா, இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். ஷோபனா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அங்குள்ள பணிப்பெண் விஜயாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Shobana

போலீசை பார்த்ததும் பதறிப்போன விஜயா, வேறு வழியின்றி தான் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த மார்ச் முதல் ஜூன் வரை ரூ.41 ஆயிரம் திருடியதாகவும், திருடிய பணத்தை ஷோபனா வீட்டில் கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் முருகன் என்பவரிடம் கொடுத்து கடலூரில் உள்ள தனது மகளின் வங்கிக் கணக்கிற்கு Gpay மூலம் அனுப்பி வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என போலீசிடம் கூறிய ஷோபனா, அவர் தன் வீட்டிலேயே தொடர்ந்து வேலை பார்க்கட்டும் என கூறியதோடு, திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... ரோல்ஸ் ராய்ஸ் கார்; ரூ.150 கோடிக்கு வீடு என அசுர வளர்ச்சி கண்ட ‘சுள்ளான்’ தனுஷின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos

click me!