திடீரென இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா கிளம்பும் ரஜினிகாந்த்; அதுவும் இத்தனை நாளா - பின்னணி என்ன?

First Published | Jul 28, 2023, 12:21 PM IST

மாலத்தீவுக்கு சென்று வந்த ரஜினிகாந்த், அடுத்ததாக இமயமலைக்கு ஒரு வாரம் ஆன்மீக சுற்றுலா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் இதில் நடித்துள்ளனர். குறிப்பாக கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

rajinikanth

ஜெயிலர் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான ரிலீஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படியுங்கள்... LGM Review : சினிமா பயணத்தை சிக்சருடன் தொடங்கினாரா தோனி? - எப்படி இருக்கிறது எல்ஜிஎம்? முழு விமர்சனம் இதோ

Tap to resize

rajinikanth

கடந்த சில வாரங்களாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை திரும்பி உள்ளார். அவர் ஆடியோ லாஞ்சில் என்ன பேசப்போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலா கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

rajinikanth

அதன்படி வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி அவர் இமயமலைக்கு செல்ல உள்ளாராம். அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளாராம். இந்த பயணத்தின் போது இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினிகாந்த் விசிட் அடிக்க உள்ளாராம்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தான் நடித்த படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இடையே உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகள் செல்லாமல் இருந்த ரஜினி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் செல்லாமல் இருந்தார். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இமயமலைக்கு செல்ல உள்ளார் ரஜினி. ஜெயிலர் படம் வெற்றியடைய வேண்டி தான் அவர் இந்த ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... நடிகை ஷோபனா வீட்டில் பணத்தை அபேஸ் செய்த வேலைக்கார பெண்... சிக்க வைத்த Gpay - பின்னணி என்ன?

Latest Videos

click me!