Vinnaithaandi Varuvaaya
தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரு மாஸ்டர் பீஸ் காதல் படங்களின் பட்டியலில் விண்ணைத்தாண்டி வருவாயா தான் முதலிடம் பிடித்திருக்கும். அந்த அளவுக்கு ரசிகர்களை இம்பிரஸ் செய்திருந்தது அப்படம். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை கெளதம் மேனன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சிம்பு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷாவும் நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் கார்த்திக் - ஜெஸ்ஸியாக நடித்தார்கள் என்று சொல்வதைவிட வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது.
VTV Movie
விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்புவின் கெரியரில் ஒரு மைல்கல் படமாக அமைந்துள்ளது. சொல்லப்போனால் தமிழில் அதிக ரீ-ரிலீஸ் ஆன படமும் அது தான். ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை ஒட்டி அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வது ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. அப்படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகள் ஆனாலும் அதன் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது பார்த்தாலும் அது ஒரு ஃபீல் கொடுக்கும், அதுவே அப்படத்தின் மேஜிக் என்றே சொல்லலாம்.
Simbu, VTV Ganesh
விண்ணைத்தாண்டி வருவாயா படம் பலருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் மூலம் தான் நடிகை சமந்தா திரையுலகில் அறிமுகமானார். அதேபோல் இப்படத்தில் நடிகர் சிம்புவின் மெண்டராக இருக்கும் விடிவி கணேஷ், அதற்கு முன்னர் வரை ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். ஆனால் விடிவி படத்தின் மூலம் தான் அவருக்கு நடிகராக ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அப்படத்தை தயாரித்தவர்களில் விடிவி கணேஷும் ஒருவர்.
இதையும் படியுங்கள்... ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு படம் இயக்க சபதம் எடுத்த மாரி செல்வராஜ்!
Mahesh Babu is the first Choice for VTV Movie
இப்படி காலம் கடந்து கொண்டாடப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க இயக்குனர் கெளதம் மேனனின் பர்ஸ்ட் சாய்ஸ் ஆக இருந்தது சிம்பு இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் நிஜம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க கெளதம் மேனன் முதலில் அணுகியது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை தானாம். ஆனால் அவர் அந்த சமயத்தில் மாஸ் படங்களில் நடித்து வந்ததால், காதல் படம் வேண்டாம் என தவிர்த்துவிட்டாராம்.
Vivek Reject VTV movie
அதன்பின்னர் தான் சிம்புவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படம் சென்றிருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் நல்ல வேள மகேஷ் பாபு இந்த படத்தில் நடிக்கவில்லை என கூறி வருகின்றனர். ஏனெனில் தன்னைவிட யாரும் இந்த ரோலுக்கு செட் ஆகமாட்டார்கள் என்பது போல் அப்படத்தில் சிம்புவின் நடிப்பு இருந்ததால் அவர் இடத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் அப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. அதுமட்டுமின்றி விடிவி கணேஷ் நடித்த வேடத்தில் விவேக் தான் நடிப்பதாக இருந்ததாம். கால்ஷீட் இல்லாததால் அவருக்கு பதில் விடிவி கணேஷை நடிக்க வைத்தாராம் கெளதம் மேனன்.
இதையும் படியுங்கள்...தியேட்டரில் 1000 நாட்களை கடந்து ஓடும் சிம்பு படம்; சைலண்டாக சாதனை படைத்த STR!